FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 26, 2012, 11:53:24 AM
-
காற்றை காட்டிலும்
மிக மென்மையானவளே !
கொஞ்சும் பூக்களினை
உச்சி முகர்ந்து
கொஞ்சிடவேண்டாமென
கெஞ்சி கேட்டேனே
கொஞ்சமாவது பேச்சை கேட்டாயா ?
கொஞ்சிவிட்டு வந்துவிட்டாய் வஞ்சி நீ
வந்தபின்னர் நடந்ததென்ன அறிவாயா ?
உன் சுவாசம்பட்ட பூக்களினை சுற்றி
தேன் எடுத்திடுது தேனீக்கள் இதழொற்றி
சுவாசத்தின் சுவைபட்ட பூக்களுக்கோ
தேனீக்களின் ரீங்கார ஓசையது நாராசமாம்
உன் சுவாசத்தின் ஓசையது ரீங்காரமாம் ....
-
inimaiyana ringaram...
azagiya varigal..
-
வாழ்த்திற்க்கு நன்றி !!