FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 26, 2012, 11:45:02 AM

Title: பொறாமை ....
Post by: aasaiajiith on October 26, 2012, 11:45:02 AM
பாரினில் பரவலாய்
பலரினில் பரவியிருந்தும்
அப்பாவியான, இப்பாவியின்
பிஞ்சு நெஞ்சமதில்
தஞ்சமென உட்புகுந்து
வஞ்சமெனும் நஞ்சதனை
கொஞ்சமும் கலந்திட முடியாததால்
கடலினையே விஞ்சிடும் அளவு
கடும் பொறாமையில்
பொறாமை ....

இது நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி ....