FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on August 25, 2011, 06:09:39 PM

Title: பிணங்களோடே வாழ்தல்...!
Post by: Yousuf on August 25, 2011, 06:09:39 PM
கருங்காக்கைகள் தொண்டை
அடைத்துப்போய் கிடக்கின்றன.
எத்தனை பிரேதங்களுக்கென்று ஒப்பாரி வைப்பது
பிரேதம் செய்கிறது தேசம்.

தெருவில் வீட்டில்
மதா கோவிலில்
பள்ளிவாசலில் சூழ்ந்து கொண்டுள்ள
பிரேதங்களின் குவியலில்
இடறுப்படுகின்றன காக்கைகள்

குஞ்சுகள் தொடர்பில் கவனமற்று
ஓற்றை வெளி மதிலில்
உட்கார்ந்து கொண்டே
அகவுகின்றன காக்கைகள்

புணர்ந்து புணர்ந்து சக்கையாகிய
பெண்ணுடலின் யோனிக்குள்
குண்டு வைத்து தகர்த்துப்போகிறான்
ஒருவன்.

‘கேலி கேலி’யாக வெட்டிய குழந்தையை
கயிறில் தொங்கவிட்டு
போகிறான் மற்றொருவன்

வாய்க்குள் துப்பாக்கிவைத்து
சன்னம் பாய்ச்சி சிரிக்கிறான்
இன்னொருவன்
பிரேதம்.

வெட்டுதல் கூறுபோடுதல் எரித்தல்
குதறுதல் புணர்தல் என்றெல்லாம்
செய்து விட்டு
இறுதியில் பிரேதம் செய்கிறான்

தமிழிச்சிகள் தங்கள் யோனிகளை
பாதுகாப்பு செய்யுங்கள்.
அல்லது அவர்களது குறிகளை
அறுப்பதற்கு கத்தி வைத்துக்கொண்டே
படுத்திருங்கள்

சிங்களச்சிப்பாய் அதோ வருகிறான் குறியோடு

கருங்காகங்கள் தொண்டை
அடைத்துப்போய் அடுத்த திக்கு போகின்றன.

* கேலி கேலி - துண்டு துண்டாக (சிங்களச்சொல்)
Title: Re: பிணங்களோடே வாழ்தல்...!
Post by: Global Angel on August 26, 2011, 03:32:11 PM
:-\ :-\ :-\ :-\ :-\ :-\ :-\ :-\ kavithai nanru...

nam thesathin avala kural .. :(