FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on October 21, 2012, 12:03:41 AM
-
கரு நீல கம்பளத்தில்
விதைத்து விட்ட வைரங்களாய்
சிதறிக்கிடந்த விண் மீன்கள்
நிலவில் ஒளியை உறிஞ்சி
ஒளிர்ந்து கொண்டிருந்தது ...
நாகர்ந்துகொண்டு இருந்த
மேக கூட்டங்கள்
அடிகடி நிலவின் இருப்பை
இருட்டடித்து கொண்டிருந்தது ..
மெலிதான தென்றல்
மெல்லிடை மோதி
ஏதோ ஒரு கண பொழுதின்
நினைவலைகளை தீண்டி சென்றது ...
எங்கோ ஒரு மரகிளையில்
அமர்ந்திருந்த செண்பகமும்
தன் ஜோடி கிளை தேடி
அவப்போது கூவிகொண்டிருன்தது ...
இரவின் அமைதிக்கு புறம்பாய்
அவள் மனது அதிர்ந்து கொண்டிருந்தது
இன்ப அனுபவங்களை தேடி
அசைபோட்டவண்ணம் ...
பருவத்து வினாக்களுக்கு
விடைதாளாய் வந்தவன்
பல கேள்விகளுக்கு
விடையாகி போனவன்
பல நாட்களாய்
வினாவாகி வாட்டுகின்றான் ..
தொலைவுகள் அதிகம்தான்
நினைவுகள் தீண்டும் தூரத்தில் அடங்கிவிட்டது
கனவுகள் அதிகம்தான்
அவன் கடைக்கண் பார்வையில் நிறைவேறி விட்டது
காலம் அதிகம்தான்
கூடி கலந்த போது அது குறுகிவிடிருன்தது..
விரல்களில் மின்னிய
வெள்ளை கல் கணையாழி சொன்னது
துஷ்யந்தன் அவன் என்று ...
எங்கோ ஒரு மூலையில்
ஒரு பல்லி சொன்னது
எண்ணங்கள் தவறென்று ...
நிலவினில் தெரிந்த
அவன் முகம் சொன்னது
என் தேவதை நீதான் என்று ...
அருகிலே தூங்கும்
கைத் தொலை பேசி சொன்னது ..
அவன் இல்லமைகளின் பதிவுகளை ...
காதிருகின்றாள்...
அவன் வரவு குறுஞ் செய்தியிலும் முடியலாம் ..
கார் குழல் ஏந்தியும் தொடரலாம் ...
-
கரு நீல கம்பளத்தில்
விதைத்து விட்ட வைரங்களாய்
சிதறிக்கிடந்த விண் மீன்கள்
நிலவில் ஒளியை உறிஞ்சி
ஒளிர்ந்து கொண்டிருந்தது ...
நல்ல கற்பனை ஏஞ்சல்.
நல்ல தொடக்கம்.
ஒரே காதல் கவிதைகளா போட்டு தாக்கறீங்களே.. என்னோட காதலிக்கு பிரசண்ட் பண்ணலாம்னா இது
பெண் எழுதியதுமாதிரியல்லா இருக்கு..
கவிதை பற்றி ரெண்டே வரியில சொல்றேன்..
பொங்கின பொங்கலில் பொங்கல் அதுதவிர
பொங்கின பொங்கலில் கல்
-
ஹஹா நன்றிகள் ஆதவா... காதல் கவிதைகள் யாவருமே அசாதாரணமாய் எழுத கூடியவைதானே .. அதுதான் எழுதினேன் .. ஒத் உங்க காதலிக்கா .. பையன போல மாற்றி அமைசிடு கொடுத்து அடியை வாங்குங்க ..
ஆமா என்ன பொங்கல்ல கல்லு கல்லா இருக்கு
-
க்லோபல், எழுத்துப்பிழையைச் சொன்னேன். கவிதையில் அது வராமல் பார்த்துக்கொள்ளுங்கள், கூடுமானவரை.. ஏனெனில் அர்த்தம் மாறிவிட வாய்ப்பதிகம்.