FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Aswin on August 24, 2011, 09:18:23 PM

Title: உடல் ஆரோக்கியத்திற்கு சில ஹெல்த் டிப்ஸ்
Post by: Aswin on August 24, 2011, 09:18:23 PM
1. தண்ணீர் ஒரு நாளை குறைந்தபட்சம் 3 - 5 லிட்டர் வரைக்கும் குடித்தால் நல்லது.
2. குளிர்ந்த தண்ணீர் (ஃபிரிஜ் வாட்டர்) குடிப்பதைவிடவும், சாதாரண தண்ணீர் , பானையில் ஊற்றி வைத்த தண்ணீர் அல்லது சுடுத்தண்ணீர் குடிப்பது நல்லது.
3. சாப்பாட்டிற்கு பிறகு அல்லது எப்போதுமே சுடுத்தண்ணீர் குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் எளிதாக வெளியேற்றப்படும்
4. FAST FOOD சாப்பிடுவதை நிறுத்திவிடலாம், அல்லது குறைத்துக்கொள்ளலாம். 5. பலகாரங்கள் சாப்பிடுவதை விட பழங்களை சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ளலாம்.
6. ஐஸ் கிரிம், பேக்கரி ஐடம்ஸ் எல்லாம் மாதம் ஒரு முறை சாப்பிடலாம், அல்லது நிறுத்திவிடலாம். (இது பெரியவர்களுக்கு மட்டும்)
7. இரவில் சாப்பிடவுடன் தூங்கக்கூடாது.
8. கண்டிப்பாக உடற்பயற்சி செய்ய வேண்டும், ஒரு குட்டி வாக் போகலாம். குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி உடம்புக்கு தேவை.
9. உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், நல்ல குத்து பாட்டு போட்டு விட்டு, 15-20 நிமிடம் நன்றாக டான்ஸ் ஆடலாம். ஆடத்தெரியவில்லை என்றாலும் கையை காலை ஆட்டி ஏதாவது செய்தால் போதும் அதுவும் உடற்பயற்சியே.
10. முடிந்தவரை நம் வேலையை நாம் செய்ய பழகிக்கொள்ளலாம், வீட்டு வேலைகளிலும் சரி, அலுவலக வேலையிலும் சரி.. நம்மை நாம் ஆக்ட்டிவாக வைத்துக்கொண்டால் நம் உடலுக்கு நல்லது.

இது குறிப்பாக என் பாசக்கார நண்பர்களுக்காக...இது உங்களுக்கு எல்லாம் சொல்லறது வேஸ்ட் இருந்தாலும் "உன் கடமையை நீ செய் பலனை எதிர்பாராதே" ன்ன்னு நினைத்துக்கொண்டு சொல்கிறேன்..

1. சிகிரெட் பிடிப்பதை நிறுத்திவிடலாம், அல்லது குறைத்துக்கொள்ளலாம், இதனால் உடல் பாதிப்பு மட்டும் ஆண்மைகுறைவிற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
2. தண்ணீ அ(கு)டிக்கறதையும் நிறுத்திக்கலாம்.. இதை இந்த ஜென்மத்தில் நீங்கள் யாரும் செய்ய போவது இல்லை, அதனால் குறைத்துக் கொள்ளுங்கள். இதனுடைய இம்பேக்ட் எல்லாம் நான் சொல்ல வேண்டியது இல்லை
Title: Re: உடல் ஆரோக்கியத்திற்கு சில ஹெல்த் டிப்ஸ்
Post by: Global Angel on August 26, 2011, 04:11:07 PM
Quote
9. உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், நல்ல குத்து பாட்டு போட்டு விட்டு, 15-20 நிமிடம் நன்றாக டான்ஸ் ஆடலாம். ஆடத்தெரியவில்லை என்றாலும் கையை காலை ஆட்டி ஏதாவது செய்தால் போதும் அதுவும் உடற்பயற்சியே.


neenga panrathellam namala panna solrela rrrrrrrrrr >:(