தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழன் on October 17, 2012, 08:16:19 AM
Title: தோல்வி நமக்கு ஆசான்
Post by: தமிழன் on October 17, 2012, 08:16:19 AM
தோல்வியை கண்டால் துவண்டுவிடுவது ஏன்
தோல்வி நம்மை நாமே பார்த்துக் கொள்ள உதவும் கண்ணாடியல்லவா
தோல்வி மனிதனை செதுக்கும் பரிணாமச் சிப்பியல்லவா
தோல்வி வாழ்க்கை போராட்டத்துக்கு ஆயுதங்களை தயாரித்து தரும் உலைக்களமல்லவா
தோல்வி மனிதனை புடம் போட்டு ஒளிரச் செய்யும் நேசநெருப்பல்லவா
தோல்வி மனிதனை கூராக்கும் சாணைக்கல் அல்லவா
தோல்வி புயலயே படகாக மாற்ற பாடம் சொல்லித்தந்த உண்மையான ஒரு பள்ளிக்கூடம்
தோல்வி சுட்டுத் துளைத்ததால் தானே மனிதன் புல்லாங்குழல் ஆகிறான்
தோல்வி ஒரு இழப்பல்ல அதால் நாம் பெறுகிறோம் வெற்றி ஒரு போதை அதால் நாம் இழக்கிறோம்
Title: Re: தோல்வி நமக்கு ஆசான்
Post by: Global Angel on October 17, 2012, 02:41:38 PM
தோல்வி பற்றி அருமையான கவிதை தமிழன் .... ஆனால் தோல்வியை தாங்கும் மனதை எல்லாருக்கும் இறைவன் கொடுபதில்லையே ....
Title: Re: தோல்வி நமக்கு ஆசான்
Post by: ஆதி on October 18, 2012, 03:01:58 PM
தேல்வி கண்டவனுக்குத்தான் வெற்றியின் அருமை புரியும்
வாழ்த்துக்கள் தமிழன்
Title: Re: தோல்வி நமக்கு ஆசான்
Post by: பவித்ரா on October 18, 2012, 04:35:30 PM
தமிழன் நீங்க சொல்வது சரி தான் அழகா சொல்லி இருகிங்க .ஆனா அந்த உண்மைய எத்துகொல்கிற பக்குவம் எல்லாருக்கும் வருவது இல்லை நல்லா இருக்கு கவிதை தமிழன் வாழ்த்துக்கள்
Title: Re: தோல்வி நமக்கு ஆசான்
Post by: Anu on October 19, 2012, 10:37:18 AM