FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on October 16, 2012, 01:24:02 AM

Title: உன்னை இழந்து ஒரு இரவு
Post by: Global Angel on October 16, 2012, 01:24:02 AM
இரவின் நிசப்தத்தை
இருள் உறிஞ்சிகொன்டிருந்தது
எட்டாத உயரத்தில்
எட்டி பார்த்தவண்ணம்
ஓர் ஆந்தை
ஓயாமல் அலறிகொண்டிருன்தது
தூரத்தில் ஓர் நாய்
துக்கம் கலந்து
துயரம் செறிந்து ஊளை இட்டவண்ணம் ...

கருப்பு வெளிக்குள்
புள்ளிகளாய்
பூசிகளின் மினு மினுப்பு
அண்ணாந்து பார்த்தால்
அண்ட வெளியில்
அள்ளி தெளித்த நட்சத்திரங்கள்
ஒளி மங்கி இருள் விளக்காய்
நிலவை தேடி ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தன ...

ஒற்றையாய் பனைமரம்
ஓங்கி வளர்ந்து
திரும்பும் போதெல்லாம்
திடுக்கிட செய்து கொண்டிருந்தது
அடிகடி உரசி சென்ற காற்று
அதன் அலசலில் ஆடிய மரங்கள்
நெஞ்சு கூண்டில்
பீதியை புசித்துக் கொண்டிருன்தது ....

அடுப்பங்களையில் அடிகடி
உருண்டு புரளும் பாத்திரங்கள்
சமுத்திரத்தின் ஆழத்தில் இருக்கும்
அமைதியை கிளறி ஆர்பரிப்பு செய்வது போல்
மன கூண்டின்
தைரியத்தை  சீண்டி
பீதியை புரண்டு ஓட செய்துகொண்டிருந்தது ...

ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவரோரம்
ஒருக்களித்து உக்காந்து
உச்சமாய் பல்லி
இசுசு  இச்சு  என்ற போது
மன பயம் பிச்சுக்கொண்டு போனது ...

அய்யஹோ...
ஏகாந்த இரவும்
எரிகின்ற தனிமையும்
இவளவு பயங்கரமா ...
எங்கே சென்றாய்
உன்னை இழந்து
ஒரு இரவே உயிர் அறுகிறதே
என்னை இழந்து உன் இரவு
எப்படி வாழ்கிறது ...
Title: Re: உன்னை இழந்து ஒரு இரவு
Post by: ஸ்ருதி on October 16, 2012, 07:25:58 AM
உன்னை இழந்து
ஒரு இரவே உயிர் அறுகிறதே
என்னை இழந்து உன் இரவு
எப்படி வாழ்கிறது ...

நல்ல வரிகள்
அழகான கவிதை ..தனிமையை உணர்த்தும் கவிதை ..நன்று  :)
Title: Re: உன்னை இழந்து ஒரு இரவு
Post by: Gotham on October 16, 2012, 10:53:51 AM
தனிமை தனிமையோ...
கொடுமை கொடுமையோ னு சும்மாவா சொன்னாங்க..!


இரவின் நிசப்தத்தின் விளக்கங்கள் நல்லா இருக்கு ஏஞ்சல்.
Title: Re: உன்னை இழந்து ஒரு இரவு
Post by: Aadava on October 16, 2012, 12:27:20 PM
இரவின் நிசப்தத்தை இருள் உறிஞ்சியது
கருப்பு வெளிக்குள் புள்ளிகள்
பாத்திரங்கள் சமுத்தர ஆழத்தின் அமைதியை கிளறுவது

போன்ற படிமங்கள் அற்புதமாக இருந்தன..க்ளோபல்

ஒரு இரவைப் பற்றி சொல்லும்பொழுது இரவைப்பற்றிய வர்ணனை, சூழல் பற்றிய வர்ணனை பின்னே மனது இரவோடு ஒத்துபோதல் பற்றிய வர்ணனை ஆகியவை இக்கவிதையில் தெளிவாக கிடைக்கிறது. முதலிரண்டு பத்திகள் இரவைப் பற்றி சொல்லுகின்றன. அது எப்படிப்பட்டது என்ற தன்மையைக் குறிப்பிடுகிறது. அடுத்த பத்தி இரவின் சுற்றுப்புற சூழல் பற்றியது. தனித்த பனைமரம் (தேர்விலும் அருமை) திகிலூட்டும் காற்று... மனதோ சமுத்தரத்தின் அமைதியைக் கிளறுவதைப் போல இருக்கிறது. இது மிக அழகான படிமம். மிகப்பொருத்தமானதும் கூட.  அதற்கடுத்த பத்தி மனமும் சூழலும் பற்றிய தன்மையது. பல்லியின் சப்தம் மனக்கிளர்கிறது.

இழந்த ஓர் இரவின் பயங்கரம் தெளிவாக சொல்லப்படுதலாலேயே இழப்பின் அருமை புரிந்து விடுகிறது.
கவிதை அந்தளவில் வெற்றியே.

நல்ல கவிதை... தொடர்ந்து எழுதுங்கள்

அன்புடன்
ஆதவா.
Title: Re: உன்னை இழந்து ஒரு இரவு
Post by: Global Angel on October 16, 2012, 03:58:34 PM
நன்றிகள் ... அனைவரினதும் பாராடுதல்களுக்கு ... எந்த சிந்தனையும் இன்றி ஒரு உந்துதலில் மனம் போன போக்கில் எழுதியது உங்கள் அனைவரின் மனம் கவருமஅப்டி அமைந்தது மகிழ்ச்சியே ... மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றிகள்
Title: Re: உன்னை இழந்து ஒரு இரவு
Post by: ஆதி on October 16, 2012, 06:04:17 PM
//இரவின் நிசப்தத்தை
இருள் உறிஞ்சிகொன்டிருந்தது
எட்டாத உயரத்தில்
எட்டி பார்த்தவண்ணம்
ஓர் ஆந்தை
ஓயாமல் அலறிகொண்டிருன்தது
தூரத்தில் ஓர் நாய்
துக்கம் கலந்து
துயரம் செறிந்து ஊளை இட்டவண்ணம் ...
//
 
அபசுரத்தில் அலரும் ஆந்தையும்

அகலாத்தில் அழும் நாயும்
 
மங்கலமற்ற ஒரு தருணத்தின் குறியீடோடு ஆரம்பமாகும் கவிதை
 
//கருப்பு வெளிக்குள்
புள்ளிகளாய்
பூசிகளின் மினு மினுப்பு
அண்ணாந்து பார்த்தால்
அண்ட வெளியில்
அள்ளி தெளித்த நட்சத்திரங்கள்
ஒளி மங்கி இருள் விளக்காய்
நிலவை தேடி ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தன ...
//
 
விண்மீகள் மீதும்

மின்மினிகள் மீதும்

படர்ந்து நிலையற்றமையை விளக்கி
 
//ஒற்றையாய் பனைமரம்
ஓங்கி வளர்ந்து
திரும்பும் போதெல்லாம்
திடுக்கிட செய்து கொண்டிருந்தது
அடிகடி உரசி சென்ற காற்று
அதன் அலசலில் ஆடிய மரங்கள்
நெஞ்சு கூண்டில்
பீதியை புசித்துக் கொண்டிருன்தது ....
//
 
தனிமையின் கனத்த குயீடாய் உயர்ந்து நிற்கும் ஒற்றை பனைமரத்தை வளர்த்து
 
பெருங்காற்றில் தலை விரி கோலமாய் ஆடும் இராக்கால மரங்களின் ஆடத்தில் பீதியை உட்புகுத்தி

 
//அடுப்பங்களையில் அடிகடி
உருண்டு புரளும் பாத்திரங்கள்
சமுத்திரத்தின் ஆழத்தில் இருக்கும்
அமைதியை கிளறி ஆர்பரிப்பு செய்வது போல்
மன கூண்டின்
தைரியத்தை  சீண்டி
பீதியை புரண்டு ஓட செய்துகொண்டிருந்தது ...
//
 
அமானுஸ்யத்தை உள் நுழைத்து
 
அச்சகரமான பொழுதன்றாய் மாறி
 
//ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவரோரம்
ஒருக்களித்து உக்காந்து
உச்சமாய் பல்லி
இசுசு  இச்சு  என்ற போது
மன பயம் பிச்சுக்கொண்டு போனது ...
//
 
பல்லி ஒன்றி துணையோடு அவமங்கலம் பேசி, மரணத்தின்
 
நினைப்பொன்றை சீண்டி
 
//அய்யஹோ...
ஏகாந்த இரவும்
எரிகின்ற தனிமையும்
இவளவு பயங்கரமா ...
எங்கே சென்றாய்
உன்னை இழந்து
ஒரு இரவே உயிர் அறுகிறதே
என்னை இழந்து உன் இரவு
எப்படி வாழ்கிறது ...//
 
ப‌ய‌ங்க‌ர‌ங்க‌ளால் சூழ‌ப்ப‌ட்ட‌ த‌னிமையோடும்
 
மிக‌ வெக‌மாய் துடிக்கும் இத‌ய‌த்தில்
 
இர‌த்த‌தோடும் பாயும் ப‌யத்தோடுமான‌தாய்
 
அந்த‌ துய‌ர்மிக்க‌ பீதியான‌ பொழுதின்
 
கோர‌த்தை வ‌ர்ணித்த‌ வித‌ம் ந‌ன்று
 
ஒற்றை ப‌னைம‌ர‌ம் த‌னிமைக்கான‌ ச‌ரியான‌ குறியீடு அத‌ற்காக‌வே ஒரு சிற‌ப்பு பாராட்டுக்க‌ள்
 
முழுக்க‌ முழுக்க‌ அவ‌ம‌ங்க‌ல‌ங்க‌ குறயீடுக‌ளால் பின்னி, த‌ருண‌த்துக்கும், சூழ‌லுக்கும், இட‌த்துக்கு அவ‌ற்றை பொருந்த‌ சொல்லிய‌ இட‌ங்க‌ளையும் பாராடியே ஆக‌வேண்டும்
 
க‌ன‌மான‌ க‌ண‌த்தை க‌ன‌மாக க(கா)‌ட்டிய‌ க‌விதை, பாராடுக்க‌ள்
 
//ஏகாந்த இரவும்
எரிகின்ற தனிமையும்
இவளவு பயங்கரமா ...
எங்கே சென்றாய்
உன்னை இழந்து
ஒரு இரவே உயிர் அறுகிறதே
என்னை இழந்து உன் இரவு
எப்படி வாழ்கிறது ...//
 
இந்த‌ வ‌ரியை உங்க‌ அனும‌தியோடு என் குடும்ப‌ ச‌ண்டையை ச‌ரி செய்ய‌ ப‌ய‌ன்ப‌டுத்திக்கிறேன் :D
 
நீங்க‌ தான் ச‌மாதான‌ம் செய்ய‌ வ‌ர‌ மாட்டேனு சொல்லிட்டீங்க‌, உங்க‌ க‌விதை வ‌ரியாவ‌து வ‌ர‌ட்டுமே :D

பாராட்டுக்கள்
Title: Re: உன்னை இழந்து ஒரு இரவு
Post by: Gotham on October 16, 2012, 06:34:58 PM
ada elaathukum idam pidikaraangappaa  8)
Title: Re: உன்னை இழந்து ஒரு இரவு
Post by: ஆதி on October 16, 2012, 07:16:51 PM
//ada elaathukum idam pidikaraangappaa   //

ஹி.. ஹி..

எல்லாம் ஒரு ஆர்வ கோலாருதான் :D
Title: Re: உன்னை இழந்து ஒரு இரவு
Post by: Global Angel on October 16, 2012, 07:23:51 PM
நன்றிகள் ஆதி எங்கே உங்கள் பின்னூட்டம் காணோம்னு பார்த்தேன் .. வந்திரிச்சு  நன்றிகள் ... அட இந்த கவிதைல நீங்க எல்லாம் சொல்ற அளவுக்கு அவல சிறப்பு இருகுனது எழுதி முடிச்சு நீங்க எல்லாம் கருது சொல்லும்வரை சத்தியமாய் தெரியாது .. மீண்டும் நன்றிகள் ...

ஹஹஹா ..  எடுத்துகோங்க ஆதி காசா பணமா ... கவிதை தானே .. எடுத்து பயன்படுதிகொங்க .... சமாதானம் ஆனா சரிதான் ... குட்டி பாப்பா சீக்ரம் பொறக்க வாழ்த்துகள் ..

கோதம் .. எங்க போனாலும் துண்டு போடுற பலகம் விட்டு போகாதே .. இங்கமட்டும் போகுமாக்கும்
Title: Re: உன்னை இழந்து ஒரு இரவு
Post by: Anu on October 17, 2012, 06:07:21 AM
எங்கே சென்றாய்
உன்னை இழந்து
ஒரு இரவே உயிர் அறுகிறதே
என்னை இழந்து உன் இரவு
எப்படி வாழ்கிறது ..

rose dear nice kavithai.
indha lines pirivin ekkathaiyum
thanimaiyan thuyaraiyum azhaga solluthu..
*
இந்த‌ வ‌ரியை உங்க‌ அனும‌தியோடு என் குடும்ப‌ ச‌ண்டையை ச‌ரி செய்ய‌ ப‌ய‌ன்ப‌டுத்திக்கிறேன்
aadhi sollave illa ungaluku kalyaanam aagitunnu. vaazthukkal.
*
சமாதானம் ஆனா சரிதான் ... குட்டி பாப்பா சீக்ரம் பொறக்க வாழ்த்துகள் ..
naanum idhai vazhi mozhiyaren aadhi :).

Title: Re: உன்னை இழந்து ஒரு இரவு
Post by: ஆதி on October 17, 2012, 08:51:10 AM
Ha ha ha.. Anu Akka

Chatla mathiyum mangaiyum kintal panni kittu irunthangka

chumma athai appadiye ingka sonnen :D