FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: vedhalam on August 23, 2011, 07:58:38 PM

Title: அதிகாலை நீ குளித்துவிட்டு...
Post by: vedhalam on August 23, 2011, 07:58:38 PM
அடுத்தவரின்(ஆணோ/பெண்ணோ) உடைகளை கவனிப்பதில் பொண்ணுங்களை விட பசங்களுக்கே அதிக ஆர்வம்

அதிகாலை நீ குளித்துவிட்டு, அறையில் பதித்து செல்லும் தண்ணீர் படிந்த பாதச்சுவடுகளில் தினமும் எனக்கு "ராதை ஜெயந்தி" தான்.

தோழி செய்யும் உதவியிலேயே மனதை வருடுவது, மாதக்கடைசியில் காசில்லை என்று தெரிந்தவுடன் 200 ரூபாயை பாக்கெட்டில் வைத்து செல்வதுதான்...

பர்சிலிருந்து ஒரு ரூபாய் செலவாகி இருந்தாலும் அதற்கு கணக்கு சொல்ல தெரிந்திருக்கிறது பெண்களுக்கு... #ஆனா பசங்களுக்கு..?

தலைவா "வெண்ணை வெட்டி" என்பதைத்தான் முழிபெயர்த்து Butter_cutter என்று வெச்சிருக்கீங்களா? #அபாரம்

சிக்னல் கிடைக்கலேனா மொபைல குலுக்கனும், இடம் வலமா ஆட்டனும்ன்னு சொல்லிக்கொடுத்த விஞ்ஞானி யாருப்பா?

ஆசைகளே நிறைவேறுவதில்லையாம்,இதில் கனவுகளும் லட்சியங்களும் வேறு வரிசையில் நிற்கின்றன.

மடங்கள் எல்லாமே பேங்குகளாகவும், தங்கச் சுரங்கங்களாகவுமே உள்ளன, அது ஜெயந்திரராகட்டும், சத்யானந்தா, சாய்பாபா மடங்களாகட்டும் எல்லாமெ ஒன்னுதான்

என்னை வெளியுலகுக்கு காட்டிக்கொள்வதில்தான் எவ்வளவு கலப்படம் !

தெரிந்தவர்களிடம் நான் அதிகம் எதிர்ப்பார்ப்பது எதிரில் வரும் போது ஒரு சிறு புன்னகை தான்!

பிகர்களை ஈஸியா மடக்க சாமியார் வேஷம் போடுவது தான் சுலபமான வழி...

உன்னுடனான கணங்களை எங்காவது பதிவு செய்திட வேண்டும் என்ற என் பேராசையே ஒவ்வொரு நாளும் என்னை எழுத வைக்கிறது..

பெயர் தான் நாட்குறிப்பு..எழுதப்போவது என்னமோ உன்னைப்பற்றி மட்டுமே.

மறந்துவிடக்கூடாத கனவுகளை விட மறக்க வேண்டிய கனவுகளே அதிகம் நினைவில் இருந்து இம்சிக்கின்றன.

தொட்டுப்பேசக் கூடாதென்றாலும், தொட்டுப் பேசுவது நட்பு... தொட்டுப் பேசலாமென்றாலும் தொடாமல் பேசுவது காதல்...!
Title: Re: அதிகாலை நீ குளித்துவிட்டு...
Post by: Yousuf on August 23, 2011, 09:18:05 PM
Quote
தொட்டுப்பேசக் கூடாதென்றாலும், தொட்டுப் பேசுவது நட்பு... தொட்டுப் பேசலாமென்றாலும் தொடாமல் பேசுவது காதல்...!

நல்ல பதிவு வேதாளம் மச்சி...!!!
Title: Re: அதிகாலை நீ குளித்துவிட்டு...
Post by: Global Angel on August 23, 2011, 10:10:44 PM
Quote
மறந்துவிடக்கூடாத கனவுகளை விட மறக்க வேண்டிய கனவுகளே அதிகம் நினைவில் இருந்து இம்சிக்கின்றன.




நல்ல பதிவு வேதாளம் ;)
Title: Re: அதிகாலை நீ குளித்துவிட்டு...
Post by: pEpSi on August 29, 2011, 07:08:53 PM
nalla potturuknga vethalam machi...