தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on October 14, 2012, 11:28:05 AM
Title: விழைவு
Post by: ஆதி on October 14, 2012, 11:28:05 AM
வருத்திக் கொண்டே இருக்கிறது ஒரு விழைவு அவளை
அறுத்தெறியத்தான் நினைக்கிறாள்
ஒவ்வொரு உணர்வும் முக்கியமென்றொருவன் சொல்ல தீவற்றதாகிறது விழைவின் வருத்தல்
நுண்மீதமுமின்றி துறந்து விடுபடலுக்கு முழுமுறறாய் ஆயத்தமான ஒரு இடைவெளியில் விடமுடியா ஒன்றவளை உள்ளிழுத்து தாழிட்டது விடமுடியதவைகளில்
மேலும் அவளை வருத்த துவங்கிவிட்டது அவ்விழைவு
Title: Re: விழைவு
Post by: Global Angel on October 15, 2012, 02:26:54 AM
சில விஷயங்கள் இப்படிதான்... விலக நினைத்தாலும் விலக முடியாதவை தொடர நினைத்தாலும் தொடர முடியாதவை ... ...தங்களின் கவிதை சில நினைவுகளை மீள துயில் எழுப்பி விட்டு இருக்கிறது ஆதி நன்றிகள்
Title: Re: விழைவு
Post by: ஆதி on October 15, 2012, 01:09:28 PM
பின்னூட்டத்துக்கு நன்றிங்க
Title: Re: விழைவு
Post by: ஸ்ருதி on October 16, 2012, 07:22:16 AM