FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on October 12, 2012, 11:25:46 PM
-
உன்னோடான என் பந்தம்
தொலை வானும் கடலும்
உன் நினைவோடான என் பந்தம்
நிலமும் நிழலும் ...
விழித்திருக்கும் போதெல்லாம்
விரகத்தின் வழியில்
விரைவாக செல்லும்
நினைவுக் குதிரை
ஏழ்கடல் தாண்டியும்
எம்பி குதித்து உரசி கொள்கிறது
கடந்து போன நம் காதல்
களிப்புகளின் சிதறல்களில் ...
எட்டி நடந்து
உன்னோடு சேர துடிக்கும்
பாதங்களுக்கு
நீ தடயமாக விட்டு செல்வது
என் மீதான
உதாசீனங்களும்
உதிரம் உறைய செய்யும்
உன் வெறுப்பு பார்வைகளையும்தான் ....
சேர்ந்து இருக்கும் பொழுதுகளில் எல்லாம்
உன் சீண்டல்களால்
சில்மிசங்களால்
வெக்கி சிவந்து
துடிக்க தவறவில்லை என் இதயம் ..
இன்றோ விழியன் வரியில்
நீ எழுதி சென்ற
பிரியாவிடை கிறுக்கல்களில் ..
பிளந்து சிதறும் என் இதயம்
செந்நீர் துளிகளை
கண்ணீர் துளிகளாய் பிரசவிகின்றது ..
பிரசவங்களின் முடிவில்
மீந்து இருக்கும் களிப்பு இங்கில்லை
சவங்களின் சந்நிதியில்
சடுதியாய் குடிகொள்ளும்
சலனங்கள்தான் மீதம்
தவிக்கும் என் சலனங்களுக்கு
சயனமாய் வந்துவிடு
-
//எட்டி நடந்து
உன்னோடு சேர துடிக்கும்
பாதங்களுக்கு
நீ தடயமாக விட்டு செல்வது
என் மீதான
உதாசீனங்களும்
உதிரம் உறைய செய்யும்
உன் வெறுப்பு பார்வைகளையும்தான் ....
//
பாதங்களுக்கான தடயமாய் நீ விட்டு செல் உதாசீனமும், வெறும்பும் எனும் வரியை வாசிக்கும் கணத்தில் வார்த்தைகளில் உள்ள வலி மனதுக்குள் இடம் பெயர்ந்துவிடுவதை தவிர்க்க முடிவதில்லை
//பிரசவங்களின் முடிவில்
மீந்து இருக்கும் களிப்பு இங்கில்லை
சவங்களின் சந்நிதியில்
சடுதியாய் குடிகொள்ளும்
சலனங்கள்தான் மீதம்
தவிக்கும் என் சலனங்களுக்கு
சயனமாய் வந்துவிடு //
நீ சொன்னதை எடுக்கவில்லை அதனால் அது உன்னுடையதே என்றான் புத்தன்
சமாதானம் என்று சொல்லுங்கள், அவன் ஏற்காத பட்சத்தில் அது உங்களிடம் திரும்பி வருமென்றான் ஏசு
ஆனால் அவர்களின் தத்துவங்கள் காதலுக்கு மட்டுமே பொருந்துவது இல்லை
கொடுத்தக்காதல் எடுக்கபடாத போதும், ஏற்காத போதும் ரணத்தையும், விரக்தியையும், வேதனையையும் மட்டுமே விட்டுச் சொல்கிறது
அந்த வலியோடும் மனது அன்பை வலி கொடுத்தவர்க்கு வழங்கி கொண்டே இருக்கிறது
வாழ்த்துக்கள் குளோபல் ஏஞ்சல் அவர்களே..
-
நன்றி ஆதி .. நன்மையையும் தீமையும் பிறர் தர வரா.. நாமளா தேடிகுறது தானே
-
உண்மைதான், சும்மாவா சொல்லி வச்சாங்க அந்த காலத்தில்