FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ME IDIOT on October 11, 2012, 11:31:47 PM
-
"களவாட சென்றேன் , என் காதலி கூந்தலில் இருந்து சிதறிய
பூக்களை, ஆனால் எனக்கு முன்பே வண்டுகளும் , எறும்புகளும் சண்டையில்
மூழ்கி இருந்தது அந்த பூக்களை அடைய.. நான் அவைகளை விரட்ட முயன்றபோது
பின்னிருந்து ஒரு கை எனை இழுத்தது . திரும்பி பார்த்தேன் என் காதலி ...அவள் சொன்னால் ...
" நீ எனை தேடி வருவாய் என அவைகள்தான் எனக்கு தூது சொன்னது .......
-
இதில் கவிதைக்கான ஒரு சூழல் அழகாக இருக்கிறது, இன்னும் செதுக்கினால் கவிதை வடிவம் அழகாக வந்துவிடும்
காதல் கவிதைகள் மனதை ஒரு கணம் தழும்ப வைக்க வேண்டும், கடைசி வரி அப்படி ஒரு தழும்பலை உண்டாக்கியது நிஜம்
வார்த்தைகளில் கருமித்தனம் காட்டுங்கள் போதும்
தொடர்க நடை வாழ்த்துக்கள்
-
அது என்னவோ தெரியலை காதல் கவிதை எழுதுறது எண்டால் யாருக்கும் கசபதில்லை .. நன்று இடியோட்.. தொடருங்கள் உங்கள் கவி பயணத்தை