FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழன் on October 11, 2012, 11:54:57 AM
-
நான் யார் மாதிரி
பிறந்தவுடனேயே தொடங்கி விடுகிறதிந்த
யார் மாதிரி என்ற பிரச்சனை
பிறந்தவுடன் அப்பா மாதிரி
அம்மா மாதிரி அல்லது
தாத்தா மாதிரி இருப்பதாக
நாம் நகல் எடுக்கப்படுகிறோம்
இங்கே யாரும் நான் நானாக இருப்பதை
விரும்புவதில்லை
சமூகத்துக்கு தேவை
ஜெராக்ஸ் பிரதிகள்
ஏனெனில்
பிரதிகள் தொந்தரவாக இருப்பதில்லை
அவை வழக்கமானதை
குலைப்பதில்லை
வளரும் போதும்
உலகம் விரும்பும் மாதிரிகளிலேயே
நாம் வளர்க்கப்படுகிறோம்
நம் கனவுகளும் பிறர் மாதிரி
என்ற அடிப்படையிலேயே
படர்ந்து விரிகின்றன
அப்துல் கலாம் ஆகவேண்டும்
அயின்டைன் ஆகவேண்டும்
பில்கேட்ஸ் ஆகவேண்டும்
பின்லாடன் ஆகவேண்டும்
இது தான் நமது கனவு
நான் நாமாக
நமக்கென ஒரு சரித்திரம் படைப்போமானால்
அதுவே நமக்கு நாம் தரும்
அங்கீகாரம்
-
நல்ல கவிதை தமிழன். என் மனதில் தோன்றும் இந்தவித உணர்வை இன்று கவிதையாக பார்க்கும் சந்தோசம். கவிதைக்கு நன்றி தமிழன்.
-
மிக நல்ல கவிதை தமிழன், இந்த சமூகம் நாம் நகல்களாக இருப்பதையே விரும்புகிறது, நம் சுயங்களை அவை நம்புவதில்லை
யாரின் நகலும் இல்லாத சமயத்தில் இச்சமூகம் நம்மை சந்தேகிக்கிறது, நம்மை ஏசுகிறது
தனித்துவம் என்பது சமூகத்துக்கு தேவையில்லை, சார்புநிலை மட்டுமே சரித்திரம் என்று நம்புகிறது
முதல் வரி மட்டும் தேவையில்லை, அது இல்லாமலே கவிதை புரிகிறது, முதல் வரி ஆறாம் விரலை போல் இருக்கிறது கவிதைகள்
பாராட்டுக்கள்
-
எல்லாரும் என்னையும்தான் கேட்கின்றார்கள் ரோஸ் நீ யார் மாதிரின்னு ... ஹன்சிகா மாதிரின்னு சொன்னாலும் எதுகுறாங்க இல்ல .. அப்டி இருக்கும்போது எந்த சொல்லுறது யார் மாதிரின்னு ...
ஹஹா தமிழன் நன்று கவிதை முக்கியமான விஷயம் என்னவென்றால் ... நாம் நாமாக இருப்பதாய் மற்றவர்களும் விரும்புவதில்லை ஏன் நாமே விரும்புவதில்லை ... பழகி போச்சுப்பா