FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழன் on October 11, 2012, 11:30:59 AM

Title: வகைகளில் தான் எத்தனை வகைகள்
Post by: தமிழன் on October 11, 2012, 11:30:59 AM
பூக்களில் தான் எத்தனை வகை
இத்தனை பூக்கள் இல்லையென்றால்
அழகு எப்படி
அறிமுகமாகி இருக்கும்

வர்ணங்கள் தான் எத்தனை வகை
இத்தனை வர்ணங்கள் இல்லையென்றால்
இயற்கை எப்படி இத்தனை அழகாக‌
தன்னை அழங்கரிப்பாள்

மனிதர்களில் தான் எத்தனை வகை
இத்தனை வகை இல்லையென்றால்
மனிதனே மனிதனுக்கு
சலித்துப் போயிருப்பான்

வாழ்க்கை தெவிட்டாமல் இருப்பதற்கு
இந்த வகைகளே காரணம்
Title: Re: வகைகளில் தான் எத்தனை வகைகள்
Post by: ஆதி on October 14, 2012, 01:26:55 PM
நல்லா இருக்கு தமிழன்

இயற்கை என்பது அஃறிணையாய் சொல்லிவிட்டு, அழங்கரிப்பாள் என்று சொல்வது இடறுகிறது

//மனிதர்களில் தான் எத்தனை வகை
இத்தனை வகை இல்லையென்றால்
மனிதனே மனிதனுக்கு
சலித்துப் போயிருப்பான்
//

சலித்து போய்யிருப்பானா ? யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது

ஆம் சலித்துத்தான் போயிருப்பான், உயர்வு தாழ்வு பேசி, பேதம் பேசி, பிரிவு பேசி, எல்லை பேசி, மொழி பேசி, தன்னை தனித்துவம் காட்ட முடியாமல் சலித்துத்தான் போயிருப்பான்

வகைகளை பற்றி பேசத்தான் மனிதனுக்கு சலிப்பதே இல்லையே

வாழ்த்துக்கள்
Title: Re: வகைகளில் தான் எத்தனை வகைகள்
Post by: Global Angel on October 15, 2012, 02:14:10 AM
ஆம் தமிழன்  வித்தியாசம் இல்லாதுவிட்டால் மனிதனை மனிதனே ரசிக மாட்டன் ..... சலிதுதான் போய்விடுவான் ... நன்று தமிழன்