FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 22, 2011, 08:08:45 PM

Title: உன் பாசம்...
Post by: JS on August 22, 2011, 08:08:45 PM
நீ ஒரு பார்வை பார்த்தால்
பல முறை இறக்கிறேன்...
தாயின் கருவறை
எனக்கு ஒன்றல்ல
உன் இதயத்தை
சேர்த்து இரண்டு...
பசித்திடும் வேளையில்
உணவாகிறாய்...
ருசித்திடும் வேளையில்
சுவையாகிறாய்...
சோர்ந்திடும் வேளையில்
எழுந்து நிற்க்கிறாய்...
எதற்காக கலங்குகிறேன்
தெரியவில்லை...
இதற்காக மட்டும்
கலங்குகிறேன் என்றால்
அது உன் பாசம் தான் !!...
Title: Re: உன் பாசம்...
Post by: Global Angel on August 24, 2011, 05:27:56 PM
;) உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்று தொடரட்டும் .....