FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on October 09, 2012, 12:14:10 PM

Title: துரோகம் செய்த ஒருவனை
Post by: ஆதி on October 09, 2012, 12:14:10 PM
உனக்கு துரோகமிளைத்தவனை
எவ்வண்ணமெல்லாம் நீ தண்டிக்கலாம் ?

அகால இரவொன்றில்
அவன் அறைக்குள் பெற்றோலூற்றி
நெருப்பு வைக்கலாம்

நல்லவிதமாய் உறவாடி
நயவஞ்சக காய்களை நகர்த்தி
வாழ்வின் பெரும்பாதாளத்தில் கவிழ்கலாம்

ஊர்பூராவும் அவனை பற்றி
அவதூறு பரப்பலாம்

பார்க்கிற இடத்திலெல்லாம்
பாளாரென அவனை அறைய சீறிபாயலாம்

விடுதியொன்றில் எதேச்சையாய்
சந்திக்க நேர்கையில்
முகத்தில் உமிழ்ந்து அவமதிக்கலாம்

கூலிப்படை கொண்டு
குரூரமாய் தாக்கி ஊனப்படுத்தலாம்

அவன் குடும்பத்தில்
உட்பூசல் உண்டாக்கி நிலைகுலைக்கலாம்

காலம் முழுக்க அவ்ன் செய்ததை
எண்ணி எண்ணி
சபித்து கொண்டே இருக்கலாம்

ஒவ்வொரு பொழுதும்
அவன் நிம்மதியை அழிக்க‌
ஒரு பொல்லாததை செய்தவாறே இருக்கலாம்

என்றாலும்
எவ்வளவு பழிவாங்கினாலும்
உன் மனரணமும் அழுத்தமும் சினமும் பழியும்
குறியைய‌ போவதே இல்லை
ஆதலால் நீ
அவனை மன்னித்துவிடலாம்...
Title: Re: துரோகம் செய்த ஒருவனை
Post by: Global Angel on October 15, 2012, 02:40:10 AM
துரோகம் செய்தவனை மன்னிக்கும் பக்குவம் இருந்தால் யாவரும் கடவுலாகிவிடுவார்கள் .... துரோகம் மன்னிக்க முடியாத ஒன்று ... என்னை கேட்டால் மாணிக்க கூடாத ஒன்று என்றே சொல்வேன் ..
Title: Re: துரோகம் செய்த ஒருவனை
Post by: ஆதி on October 15, 2012, 01:04:16 PM
இதில் உள் குத்து ஏதாவது இருக்கா ?

மன்னிக்கப்படாத துரோகங்கள் நம்மையும் நிம்மதியாய் இருக்கவிடுவதில்லை

ஆக கடைசியில் எப்படியோ மன்னிக்கத்தான் போகிறோம், அந்த தருணம் எல்லார் வாழ்விலும் வரும் ஒன்றுதான், மன்னிப்பு என்று ஒன்றில்லை என்றால் அன்பு ஒன்று இல்லை
Title: Re: துரோகம் செய்த ஒருவனை
Post by: Global Angel on October 15, 2012, 06:57:43 PM
துரோகம் மனிப்பு எனும் சாயங்களை பூசி மறைந்து கொள்கிறதே அன்றி மன்னிக்கபடுவதில்லை எதோ ஒரு ரூபத்தில் தூங்க வைக்கப்படும் துரோகங்கள் தட்டி எழுப்பபடுகின்றது ..சாதரணமாய் அல்ல விஹரமாய் .. அதன் விளைவுகள் பாரதூரமாக அமைந்துவிடுகின்றது .. இதற்க்கு மன்னிகாமலே இருக்கலாம் .... மறக்க முடியாதவைகள் மனிப்பதில் அர்த்தமற்றவை .

எந்த உள் கூத்தும் இல்லைங்க
Title: Re: துரோகம் செய்த ஒருவனை
Post by: ஸ்ருதி on October 16, 2012, 07:29:04 AM
என்றாலும்
எவ்வளவு பழிவாங்கினாலும்
உன் மனரணமும் அழுத்தமும் சினமும் பழியும்
குறியைய‌ போவதே இல்லை
ஆதலால் நீ
அவனை மன்னித்துவிடலாம்...


எதுவாக இருந்தாலும் மௌனமே பல விஷயங்களுக்கு
பெரிய விடுதலை என்று நான் நினைக்கின்றேன்...

மௌனமாய் இருப்பது கோழை என்று ஆகா..
குற்றம் செய்தவன் என்றும் ஆகா...
சிலநேரத்து மௌனம் சில பிரச்சனைகளை தீர்க்கும் மருந்து என்னை பொறுத்தவரையில்  :)
Title: Re: துரோகம் செய்த ஒருவனை
Post by: Gotham on October 16, 2012, 10:56:24 AM
மன்னிப்பு ஒருவனுக்கு மிகக்கொடுமையான தண்டனை...
அவனுக்கு உறைக்குமானால்..


மன்னிக்கப்பட்டோமென்றே தெரியாமல் இருக்கும் ஒருவனை
என்ன தான் செய்வது?


நல்ல கருகொண்ட கவிதை ஆதி


Title: Re: துரோகம் செய்த ஒருவனை
Post by: Aadava on October 16, 2012, 12:15:58 PM
மன்னிப்பை விட கொடுமையான தண்டனை வேறென்ன இருக்கமுடியும்??..
இருப்பினும் மன்னித்த பின்னரும் திருந்தாதவர்கள் இருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா?
அவர்களை என்ன செய்யலாம்??

நல்ல கவிதை ஆதி. இறுதியில் அப்படித்தான் முடிந்தாகவேண்டும்..
Title: Re: துரோகம் செய்த ஒருவனை
Post by: ! SabriNa ! on October 31, 2012, 04:37:59 PM
superb aadhi...xcellent !!
Title: Re: துரோகம் செய்த ஒருவனை
Post by: kanmani on November 05, 2012, 02:07:32 PM
nala kavidhainga

neenga kooriya anaithu panalaam thurogiyai ana lasta neenga sona


என்றாலும்
எவ்வளவு பழிவாங்கினாலும்
உன் மனரணமும் அழுத்தமும் சினமும் பழியும்
குறியைய‌ போவதே இல்லை
ஆதலால் நீ
அவனை மன்னித்துவிடலாம்...


idhumatum venaanga .. indha kaalathula manichi viduradhudhaan thappu

gotham soldradhu pola mannichi viduradhu dhaan nama kodukara periya thandanai naalum ipolaam
apdi yarum than thappai unarvadhu illa atleast avan seidhadhuku oru nimidamavadhu avana varuthapaduthi parthomaenu sandhosapatukalaam

apo avanukum namakum ena vithayasamnu unga manasula thonuradhu enakum kekakudhu

athulaam vilaikaavadhunga..
tit for tat avalodhaan