FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: viswa on October 07, 2012, 04:37:02 PM
-
சிவாவும் பாஸ்கரும் நல்ல நண்பர்கள். நல்ல நண்பர்கள் என்று தானே கதை தொடங்கும் முதல் பொழுதில் சொல்ல வேண்டும். முன்னமே அவன் பிரிந்து விட்டார்கள் பாஸ்கர் சிவாவுக்கு கேடு நினைத்தான். அதனால் சிவா பாஸ்கரை விட்டு நெடுந்தொலைவு சென்று விட்டான். அப்படி சென்ற சிவா பாஸ்கர் செய்த கேட்டினால் கெட்டும் போகலை. பாஸ்கர் தான் நினைத்தபடி ஓஹோ என்றும் வாழவில்லை என்றெல்லாம் சொன்னால் கதையின் முடிவை சொன்னது போல அல்லவா ஆகிவிடும். என்ன கேடு செய்தான் என்று இப்போதே சொன்னால் முழு கதையில் என்ன சொல்வது.
சரி கதைக்கு வருவோம். சிவா, பாஸ்கர் பக்கத்து பக்கத்து தெருவில் வாழ்ந்து வந்தார்கள். இருவரும் ஒரே பள்ளியில் படித்தார்கள். அவர்கள் வாழ்ந்தது கிராமுமில்லை ஆனால் பெரிய நகரமுமில்லை. கதை நடந்தது சுமார் எண்பதுகளில் என்பதால் அந்த கிராமமுமில்லாத நகரமுமில்லாத அவ்வூரில் அதிகம் படித்தவர்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் அந்த ஊருக்கென்று தனியாக பள்ளிக்கூடம் இருந்தது போலவே நூலகம், அரசு அங்காடி, சிறிய அளவில் வங்கி, தபால் நிலையமென்று தன்னிறைவான கிராமம் தான் அது. ஒரு குளக்கரையும் உண்டு.
சிவாவின் அப்பாவின் அப்பா எல்லோரும் விவசாயிகள். நல்ல பாட்டாளிகள். சிவாவின் தந்தை ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே சிவாவின் தாத்தா படிச்சி கிழிச்சது போதும் விவசாயம் பார்த்தா வீட்டு பொழப்பையாவது பார்க்கலாம் என்று அவரை படிப்பில் இருந்து பாதியில் நிறுத்தி வயலுக்கு இழுத்து கொண்டு சென்று விட்டதாகவும் ஆரம்பத்தில் பள்ளி படிப்பு தொல்லைகள் இல்லாது போனாலும் தன்னுடைய நண்பர் போல படித்து ஒரு அரசு ஊழியர் ஆக முடியாமலும் சதா நிரந்தரமற்ற வருமானத்தை வானத்தை நம்பியே பிழைக்க வேண்டி இருப்பதாகவும் தன்னை போல அல்லாமல் தன் பிள்ளையாவது படித்து தலையெடுத்து குடுப்பத்தை நன்கு காப்பாற்ற வேண்டுமென்றும் அடிக்கடி சிவாவிடம் சொல்வார்.
பாஸ்கரின் குடும்பம் சிவாவின் குடும்பம் போல பஞ்சம் பிழைக்கும் குடும்பமல்ல. அந்த கிராமத்தில் ஒரளவு வசதியோடு இருந்தார் பாஸ்கரின் தந்தை. பாஸ்கரின் தாத்தா என்ன செய்யார் என்பது கதைக்கு அவசியமில்லாத காரணத்தால் அதை விடுத்து கதை தொடர்வோம். பாஸ்கரின் தந்தை அந்த கிராமத்தில் பலசரக்கு கடை வைத்திருந்தார். அதனால் பாஸ்கருக்கு கண்டிப்பாக படித்து முடித்து ஒரு அரசு வேலைக்கு சென்றாக வேண்டுமென்ற கட்டாயமில்லை. அதனால் எப்போதும் ஏனோதானோ என்று தான் படிப்பான். சிவாவை போல சுட்டிகையில்லை. சிவா எப்போதும் நன்கு படிப்பதாலும் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்குவதாலும் சிவா மேல் கொஞ்சம் பொறாமையோடே இருப்பான் பாஸ்கர். அதுவும் பாஸ்கரின் தந்தை வேறு சதா அவனை பாரு விவசாயி பிள்ளையா இருந்தும் கிழங்கை தின்னு வயித்து பொழப்பை பார்த்தாலும் எப்படி படிக்கிறான். நீ நல்லா கொட்டிக்கதான் லாயக்கு என்று திட்டிக் கொண்டி இருப்பதும் அவன் மேல் ஒரு பொறாமையை வளர்க்க காரணமாக இருந்தது.
சிவா கட்டாயத்தின் காரணமாகவே நன்றாக படித்தாலும் இயற்கையாகவே அவன் அறிவாளி. நல்ல புத்தி கூர்மையுள்ளவன். எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமை இருந்தது. ஆனாலும் ஏனோ பாஸ்கரின் கள்ள குணம் மட்டும் என்று அவனுக்கு புரிவதில்லை. ஏனென்றால் பாஸ்கர் அவனுக்கான கேட்டை என்றும் நேரடியாக அவனுக்கு தெரிந்து செய்வதில்லை. வியாபாரியின் மகன் என்பதால் சில நுணுக்கங்கள் அவனுக்கு இயற்கையாகவே தெரிந்திருந்தது. யாரை பென்சிலையாவது திருடி சிவாவின் பையில் போட்டு விட்டு, எப்படியாவது அவனை சம்மந்தப்பட்டவர்களிடம் மாட்டி விட்டு விடுவான். சிவா அடிபட இருக்கும் போது குறுக்கே விழுந்து சமாதானம் செய்வது போல சிவாவிடமும் நல்ல பெயர் பெற்று விடுவான். இதன் காரணமாக சிவா தன் வாழ்வின் மிக முக்கிய நபர்களில் ஒருவனாக பாஸ்கரை எப்போதும் கருதி வந்தான்.
ஒரு வழியாக பொருளாதர ரீதியாக கடும் சிரமங்களுக்கு கிடையில் தன்னுடைய பதினொன்றாம் வகுப்பை முடிந்திருந்தான் சிவா. பாஸ்கர் பதினொன்றாம் வகுப்பில் வெற்றி பெறவில்லை. அதனால் இருவரும் கல்லூரிக்கு போகவில்லை. தந்தையின் கடையை கவனிக்கத் தொடங்கினான் பாஸ்கர். வேலை தேட ஆரம்பித்தான் சிவா. வேலைக்கு விண்ணப்பம் அனுப்ப கூட அவனுக்கு பணம் கைவசமிருப்பதில்லை. அதனால் தன்னுடைய புத்தி கூர்மையை உபயோகபடுத்தி அந்த ஊர்க்கு தபால் அனுப்பு வரும் அந்த கிராமம் மற்றும் சுற்றுவட்டு கிராம மக்களுக்கு தபால் எழுதுவது, மணியாடார் அனுப்புவது போன்ற சிறு சிறு உதவி செய்து அதற்கு உதவி ஊதியமாக சில காசுகளை பெற்று விண்ணப்பங்களை அனுப்பி வந்தான்.
சிவா நாளடைவில் அந்த இடத்தில் சிறிய கடை போடும் அளவிற்கு வளர்ந்துவிட்டான். தபால் நிலையத்திலிருந்து அஞ்சல் அட்டை மற்றும் இன்லெண்ட் கவர், தபால் தலைகள் மற்றும் மணியாடர் பாரம்களை வாங்கி வந்து வைத்து ஒரு சிறு தொழில் போலவே நடத்தி அதில் இருந்து கணிசமாக வருமானம் ஈட்ட ஆரம்பித்தான் நாளாடைவில் தபால்தலைகளுக்கு ஒரு பைசா வீதம் கமிசன் வைத்தும் வியாபாரம் செய்ய ஆரம்பித்தான். நண்பனின் வளர்ச்சி பாஸ்கருக்கு பொருக்கவில்லை. எப்படியாவது வேலை கிடைத்து ஊரைவிட்டு போய்விடுவான் என்று நினைத்திருந்தவ்னுக்கு அவன் அங்கேயே தன்னை போல வியாபாரியாக வளர்வது பிடிக்கவில்லை.
சிவா தபால் நிலைய பொருட்களுக்கு கமிசன் அடிப்படையில் காசு வசூலிப்பது தவறு தான் என்றாலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அவர்களுடைய தபால் துறை சம்மந்தப்பட்ட உதவிகளையும் செய்து வந்தான். வேலை கிடைக்கும் வரை அவன் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற என்று ஆரம்பித்தவனுக்கு இது நல்ல வியாபார உத்தியாக தோன்றியது. ஒரு முறை ஒரு பெரியவரின் மகன் வயிற்று பேரனுக்கு ஏதோ முக்கியமான அறுவை சிகிச்சைக்கு பணம் அனுப்பவேண்டிய கட்டாயம். அந்த நேரம் பார்த்து தபால் நிலையத்தில் மணியாடர் நேரம் முடிந்து போயிந்தது. அதை தானே கொண்டு கொடுப்பதாகவும் போக்குவரத்து செலவுக்கு மட்டும் காசு தரும்படியும் கேட்டான் சிவா. அந்த பெரியவரும் அதை தந்துவிட அவன் இதையே தொழிலாக செய்தால் என்ன என்று தோன்றியது.
சில சமயம் அவரசமாகவும் கண்டிப்பாகவும் சேர்க்க வேண்டிய தபால்களை அவனே நேரில் சென்று பட்டுவாடா செய்து வந்தான். அதற்கான போக்குவரத்து செலவும் உரியவர்களிடம் பகிர்ந்து பெற்றான். இந்த வியாபாரத்தில் அவனுக்கு நல்ல லாபம் கிடைக்க ஆரம்பித்தது. சிவாவின் வளர்ச்சிக்கு கெடு நினைத்த பாஸ்கர் தபால் துறை அலுவலர்களிடம் புகார் மனுவை அளித்தான். விசாரணை செய்த தபால் துறையை சார்ந்தவர்கள் சிவாவின் இப்படிப்பட்ட தனியார் சேவைக்கு தகுந்த பதிவு செய்யாத காரணத்தால் அவனுக்கு கோர்ட் மூலம் தங்கள் வியாபாரத்தை கெடுப்பதாக நோட்டீஸ் அனுப்பியது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிவா அதற்கு பாஸ்கர் தான் காரணம் என்றதும் குடும்பத்தோடு அந்த ஊரை விட்டே சென்றான்.
அருகில் இருந்த பெரிய பட்டணத்தில் போய் வேலையும் தேடிக் கொண்டே தனியார் நிறுவனம் ஒன்றை பதிந்து அதன் மூலம் கமிசன் பெயரில் பணபட்டுவாடா மற்றும் குரியஸ் சர்வீஸ் போன்றவற்றை ஆரம்பித்தான். தானே வேலை தேடி கடும் சிரமங்களை கண்டு இருந்தவர்ன் தனியார் வேலைவாய்ப்பு அலுவலகம் ஒன்றை கூட ஆரம்பித்தான். இப்படியாக கொஞ்சம் காலத்தில் அவன் பெரும் தொழில் அதிபர் ஆகி நிறைய பேருக்கு வேலை தந்தான். லட்சாதிபதியானான். சிவாவை இவ்வளவு பெரிய மனிதனாக்கிய பாஸ்கர் அதே கிராமத்தில் அதே பலசரக்கு கடையில் அதே நிலையில் இருந்தான். கேடு நினைப்பவனும் கெடுவதில்லை சில சமயம். ???