FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ME IDIOT on October 04, 2012, 06:04:29 PM
-
ஒரு பொழுது உன்னோடு,
விழி கலையாமல் , விரல் இறுக்கி
விரசங்கள் அறியாமல் , கண்களால் வேள்வி அமைத்து
காற்றை கூட நுழைய விடாமல் ,
கசக்கி பிழிகிறேன் என் காதலை, உன் கண் வழியே இதயத்திற்கு,
இதயம் ஏற்குமானால் வழி விடு , இல்லையேல் என் உயிரை களை எடு...
கரிசனம் பார்க்காமல் ...
முற்று பெறட்டும் என் காதல் இந்த ஒரு பொழுதோடு .........