FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 04, 2012, 05:16:47 PM
-
தரிசனம் தரும்பட்சம் .....
இதுவரை நன் வரைந்த வரிகளில்
இதுதான் மிக மிக அழகு என்கிறாய்.
இதென்ன அழகு, இதைக்காட்டிலும் மிக அழகாய்
மிச்சம் ஏதுமின்றிஎன் கவித்திறன் அதன்
உச்சம் சென்று, உலகின் மொத்த அழகின்
சொச்சம் அதை, உன் காலடியில் கொட்டிவைப்பேன் ,
லட்சம் கவிதைப்பூவினை, வரிகள் நார் கொண்டு
கட்டிவைப்பேன், உன் மலர் முகம் அதன்
தரிசனம் தரும்பட்சம் .....