FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 02, 2012, 12:47:14 PM
-
முழுதாய் மறைத்திருந்தாயானால் ???
மதி முகமே !
ஒருவேளை
முகமதிய பெண்டீர் போல்
முகமலரை முக்காடிட்டு
முழுதாய் மறைத்திருந்தாயானால் ???
மணமணக்கும் மலர்வகை பலகொண்டு
அழகான மலர்ச்சரம் கோர்ப்பது போல்
கவின் தமிழ்கொண்டு என் பதிப்புக்கள்
வெறும் கால்சதவிகிதம் தான் பதிந்திருக்கும்
மீதம் முக்கால் சதவிகிதமும்
இந்த அற்பன் ஆசையின் அற்ப ஆசைகளோடு
மண்ணோடு மண்ணாக புதைந்திருக்கும்
மதி முகமே !
உன் முகமெனக்கு ,வராம ? சாபமா ?
முடிவுக்கு வரமுடியாமல் மருகியபடி நான் ..
-
இந்த அற்பன் ஆசையின் அற்ப ஆசைகளோடு
மண்ணோடு மண்ணாக புதைந்திருக்கும்
மதி முகமே !
உன் முகமெனக்கு ,வராம ? சாபமா ?
முடிவுக்கு வரமுடியாமல் மருகியபடி நான்
ithanai azagaana varigal vara kaaranamaai irukkum anaithum kavithaiku varamey...
-
Nandri!!