FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Yousuf on August 22, 2011, 11:30:31 AM
-
ஓரிறையின் நற்பெயரால்
"மனசாட்சிக்கு பயந்து நடந்துக்கோ...."
"மனசாட்சி இருந்தா இப்படி செய்வியா..?"
இதைப்போன்ற வாசகங்கள் பாமர மக்கள் முதல் படித்த அறிவார்ந்த மனிதர்கள் வரை அன்றாட வாழ்வில் அதிகமாக பயன்படுத்துவதை காண்கிறோம். ஆக இவ்வாக்கியங்கள் மனசாட்சிக்கு பயந்தால் மட்டுமே போதுமானது எல்லா செயல்களிலும் நீதமாக இருக்க முடியும் என்பது போல் தோன்றுகிறது... உண்மையாக மனசாட்சி மட்டும் மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் நீதி செலுத்த போதுமானதா - கண்டிப்பாக முடியாது ...ஏன்?
ஒரு செயலை செய்வதால் ஏற்படும் விளைவு நன்மையா? தீமையா என பகுத்து அஃது தீமையே தவிர்த்து நன்மையே செய்ய தீர்மானிப்பதே மனசாட்சியின் பிரதான வேலை.பொதுவாக மனசாட்சி என்பது பெரும்பாலும் நன்மை செய்வதை அடிப்படையாக கொண்டிருந்தாலும் இரண்டு அடிப்படை காரணங்கள் மனசாட்சியின் செயல் போக்கை மாற்றுகிறது
(1) நிலையற்ற மனித எண்ணங்கள்
(2) மனிதர்கள் வாழும் சூழல்,சமுகம் இவ்விரு நிலைகளும் மனசாட்சியின் செயல் திறத்தை எவ்வாறு மாற்றுகிறது என்பதை பார்ப்போம்.
மனசாட்சியின் அடிப்படை செயல் நிர்வாகத்திற்கு மிக முக்கிய காரணியாக அமைவது மனித எண்ணங்கள் ஆகும்.சாதரணமாக அனைத்து நிலைகளிலும் நன்மை தீமைகளே தரம் பிரித்து செயல்படுத்தினாலும் சாதாரண நிலை கடந்த அதாவது ஆசை, கோபம், விரக்தி, வேகம் மற்றும் தேவை போன்றவை மிகைக்கும் போது மனசாட்சியால் நன்மையை மட்டும் மேற்கொள்ள முடியாது. மாறாக அந்நேரங்களில் ஏற்படும் மனித எண்ணங்களுக்கே மனசாட்சி முக்கியத்துவம் கொடுக்கும். உதாரணமாக மனிதனுக்கு கோபம் வரும் வரை இயல்பாக பேசக்கூடியவன் அஃது கோபம் மிகுதியால் தவறான வார்த்தை பிரயோகமும் ஏன் கொலை செய்யக்கூடிய அளவிற்கு கூட அவனை தள்ளும் நிலைக்கு காண்கிறோம்.
அதுப்போலவே., அடுத்தவர் செய்யும் ஒரு தவறை கண்டிக்கும் மனசாட்சி அதே தவறை தமது மனம் உட்பட்டு செய்யும் போதும் நியாயம் கற்பிக்கவே முயலும் மது அருந்துவது இதற்கு நல்ல உதாரணம் பொதுவாக மது அருந்துவதை வன்மையாக கண்டித்தாலும் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிருத்தி தாம் மது அருந்த செய்வதை மனசாட்சி தவறென்று சொல்லாது. மேலும் பாதிப்பும் -தீங்கும் மனசாட்சி செயல் போக்கை முற்றிலும் மாற்றக்கூடியவை., நாம் பிறருக்கு தீங்கோ பாதிப்போ ஏற்படுத்தாமல் இருந்தும் நமக்கு பிறரால் மிக பெரிய பாதிப்போ தீங்கோ ஏற்படுத்தப்பட்டால் பழிக்குப்பழி வாங்குவதை தான் முதலில் நமது மனசாட்சி ஊக்குவிக்கும். ஆக பிறர் நமக்கு தந்தது தீது என்று உணர்ந்தும் அதே தீமையே தான் நாம் அவருக்கு வழங்க வேண்டும் என மனசாட்சி வலியுறுத்தும் போது அதன் நீதத்தன்மை பூஜ்யமாக்கப்படுகிறது. மனதளவில் பாதிக்கப்பட்டவர், சிறுவர், வயோதிகர் போன்ற சிலரின் மனங்களே பழிவாங்கும் எண்ணம் தவிர்த்து மாற்று தீர்வை எதிர்பார்க்கிறது. மேலும் ஆசையும் மனசாட்சியை நன்மை செய்வதை விட்டு திசை திருப்பவே செய்கிறது. விபச்சாரம் தவறு என்பது இயல்பாக நம் மனசாட்சி ஏற்றுக்கொண்டு அஃது விபச்சாரத்தின் பக்கம் நம் மனதை நாட விடுவதில்லை. ஆனால் ஆணோ பெண்ணோ தம் மனம் உடன்பட்டு விபச்சாரம் புரிவதாக இருந்தால் அதற்கு மனசாட்சி ஆசையின் மிகுதியால் அதை குற்றம் காண்பதில்லை. மேலும் இதை சமுக குற்றமாக பார்க்காமல் இருவரும் உடன்பட்டு தானே செய்கிறோம் என ஆறுதல் கூறி மேலும் இத்தகாத செயலை மனசாட்சி நியாயப்படுத்தவே செய்கிறது.
ஆக சிந்தனை மாறுபாடும் சுயநலமிக்க எண்ண வெளிபாடும் மனசாட்சி அதன் உண்மை நிலைக்கு புறம்பாக அல்லது எதிராக முடிவெடுப்பதை தவறாக காணாது.
கொலை, கொள்ளை மற்றும் வன்முறை போன்றவைகள் யாவும் பொதுவாக எல்லோராலும் சமுக சீர்கேடுகளாக கருதப்பட்டாலும் அச்செயல்கள் தவறென்று மிக நன்றாக தெரிந்தும் அத்தகைய தீய செயல்களை செய்யக்கூடியவர்கள்., அவர்களின் மனசாட்சிக்கு உடன்பட்டு தான் செய்கிறார்கள் என்பது தெளிவு. அஃது அவர்களின் மனநிலையும் இச்செயல்பாடுகளுக்கு அவர்கள் இயங்கும் சமுக பிண்ணனியே குற்றம்சாற்றி தமது தவறான போக்கிற்கு நியாயத்தை கற்பிக்கிறது. ஆக அங்கு மனசாட்சியின் நடு நிலை செயல்பாடு பொய்தே போய்விடுகிறது.
சுய தேவையின் அடிப்படையில் மாற்றமடையும் எண்ணங்களும் சமுக சூழ்நிலைகளின் குறுக்கீடும் மனசாட்சியின் செயல் திறத்தை மாற்றவல்ல ஆயுதமாகும். எனவே மனசாட்சியால் நன்மையான காரியங்களை மட்டுமோ அல்லது உண்மையை அடிப்படையாக செயல்களை மட்டுமோ எல்லா நிலையிலும் செய்ய முடியாது. ஆக மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டு 100 சதவீகித உண்மையான வாழ்வை எவராலும் மேற்கொள்ள முடியாது.
அப்படியானால் நமது எண்ணத்திற்கு -தேவைக்கு -நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றமடையாத, எல்லா சமுக சூழலிலும் ஒரே நிலையில் செயல்பட, மனிதர்களுக்கு மனிதர் மாறுபடாத நீதமாக இருக்க மனசாட்சியை விட உயரிய சக்தி இருக்கிறதா....? உங்களுக்குள்ளேயே வினா எழுப்புங்கள் விடை தெரிந்தால் அதுவே நேர்வழிக்கு அழைத்து செல்லும் பாதையாகும்.
உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா ? (51:21)
-
nalla pathivu... ;) yow mana saadsi erukka nokku.... ivlo naala poste podama enga ponel.. rrr >:( ;D ;D
-
Udambu sari illama hospital ah irunthen rosu loosu... :) :) :)