FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dong லீ on September 30, 2012, 11:42:53 AM

Title: இரவு
Post by: Dong லீ on September 30, 2012, 11:42:53 AM
குளத்து மீன் குதித்தாட
வண்டுகள் வட்டமிட
மழை துளிகள்
குளத்தில் மோதி
குமிழிகளாய் குவிந்திட
எழும் இன்னிசையில்
காதல் ரெக்கை விரித்து
காற்றில் ஆடும்

தென்றல் தீண்ட
சிவக்கும் பூக்கள்
நாணத்தால் தலை
திருப்பும்

பூவின் மடியில் உறங்கும்
வண்ணத்து பூச்சி
முகம்    சுழிக்க.
வண்ணங்கள் நீரில் சிந்தும்

நீரில் நீந்தும் நிலவில்
சாயம் தோயும்

தாமரை
நிலவை தொட்டு விட
காதல் காற்றின் கரம் பிடித்து
மிதந்து வரும்

இரவின் காதல்கள்
 தினமும் தொடரும்



Title: Re: இரவு
Post by: Global Angel on October 01, 2012, 12:40:09 PM
மச்சான் உன் கவிதை அருமை கற்பனை ... ஆனால் வார்த்தை கோர்ப்புகள் இன்னும் அழகாய் கொர்க்கலாமே உக்காந்து ஒன்னு ஒன்ன கோர்
Title: Re: இரவு
Post by: Thavi on October 01, 2012, 06:28:11 PM
;Dkavithain enkuruve kalagunga remba arumaiya iruku neenga entha meena vattam mituringa  ;D
Title: Re: இரவு
Post by: ஆதி on October 14, 2012, 01:40:50 PM
நல்லா இருக்கு லீ

சில இடங்களை மிகவும் ரசித்தேன்

//மழை துளிகள்
குளத்தில் மோதி
குமிழிகளாய் குவிந்திட
//

//பூவின் மடியில் உறங்கும்
வண்ணத்து பூச்சி
முகம்    சுழிக்க.
//

//நீரில் நீந்தும் நிலவில்
சாயம் தோயும் //

சுற்றி வ‌லைச்சு த‌ட்டையா ஒரு விட‌ய‌த்தை சொல்லாம‌ல் சுருக்க‌மாக‌ அழ‌காக‌ திற‌ந்தான் க‌விதைக்கை தேவை

//தென்றல் தீண்ட
சிவக்கும் பூக்கள்
நாணத்தால் தலை
திருப்பும்
//

நாண‌த்தில் இமை க‌விழும், த‌லை சாயும், திரும்பாது, லீ

//தாமரை
நிலவை தொட்டு விட
காதல் காற்றின் கரம் பிடித்து
மிதந்து வரும்
//

நில‌வு வ‌ரும் நேர‌ம் தாம‌ரை அல‌ர்ந்திருப்ப‌தில்லை, இங்கேயும் கொஞ்ச‌ம் ம‌ராம‌த்து பார்க்க‌ வேண்டியிருக்கு

உங்க‌ வ‌ரியை ப‌டிக்கும் போது சும்மா யோசிச்சேன்

நில‌வில் பூத்த‌ தாம‌ரை - அவ‌ள்
முக‌த்தில் பூத்த‌ புன்ன‌கை

வாழ்த்துக்க‌ள் லீ