FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 29, 2012, 05:08:25 PM
-
விந்தையான அழகு !!
என்னவளே,இனியவளே !
இதோ இதுநாள்வரையினில்
பொலிவின்றி, ஒற்றை ஒற்றையாய் பூத்து வந்த
உன் வசிப்புப்பகுதி, பூங்காவின் பூக்கள்
சிலநாட்களாய், கற்றை கற்றையாய் கண்கவரும்படி
பரவசம்பூக்க பூத்துகுலுங்குதல் அறிவாயா?
வெளியூர் சென்றிருக்கும் நீ இல்லாத துணிவில்
குளிர்விட்டு போன தளிர்பூக்கள், துளிர்விட்டு
பூத்திருப்பது, விந்தையான அழகு தான் ...