FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 28, 2012, 06:34:54 PM
-
உன்னை
பிரிகிறப் பொழுதுகளில்
வழிகிற ஏக்கங்களின் ஆழங்களில்
நடமாடலாம்
சில தேவதைகள்..
கசியும் உன் உதட்டின்
மௌனங்களில்
ஒளிந்தும் இருக்கலாம்
சிந்தப்படாத ஒரு புன்னகை
பேசப்படாத ஒரு வார்த்தை
எனக்காக உன் காதல்..
-
ஹஹா இருக்கலாம் இருக்கலாம் ... இருக்க இல்லையான்னு கேட்டு தெரிஞ்சுகோங்க ... வேற யாரவது கேட்டுக்க போறாங்க ... நல்ல காதல் கவிதை அருமை
-
கேட்கலாம், யார் கிட்ட கேட்குறதுனு தெரியலை, இப்போதைக்கு கவிதை மட்டும்தான் எழுத முடியும், செயல் எல்லாம் படுத்த முடியாது
நன்றிங்க