FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 27, 2012, 05:02:56 PM
-
பா - 1
படம் : பார்த்தேன் ரசித்தேன்
பாடல் : எனக்கென ஏற்கெனவே
பல்லவி:
ஆண் :
ஒருமுறை என் மனதை உரசிய நிலவே
உயிருக்குள் மென்மை வந்து பரவிடும் உணர்வே
செல்லூடும் தீ துளிகள்
நெஞ்சுக்குள் பூவெளிகள்
இப்படியேன் இப்படியேன் விதவிதமாய் நிகழ்கிறதே
பெண் :
இப்படியேன் இப்படியேன் விதவிதமாய் நிகழ்கிறதே
எதன் விளைவென்று தெரியாதடி..
ஒரு நொடி நோக்கி திரும்பிய பின்னே
என்னில் ஏதோ கொள்ளை
மறுபடி நோக்க ஏங்கி துடித்தேன்
வெட்கம் விலகவில்லை
வயது பெண்ணின் மனதை கவர்ந்தாய் நீயே நீயே..
ஆ:
அழகே! அழகே! உலகின் அழகுகள்
உன்னழகின் மிச்சமடி
உன்னழகின் வெளிச்சமடி
உன்னை போல இருப்பதனால் பூ
உந்தன் ஜாதியடி
கன்னங்குழியெனும் கலங்கம் இருக்க நீ
நிலவின் பேத்தியடி
பெ :
இளயவள் இதயம் கெண்டை மீனாய்
தரையில் குதிக்கின்றது - என்
இமைகளில் துடிக்கின்றது
உன் வரவுகள் எண்ணி
வரம் பெற காதலை
தவமொன்று புரிகின்றது..
ஆ:
வாடைப்பூவே எந்தன் நெஞ்சை
வாட்டியே வைக்காதே - உன்
வாசலை அடைக்காதே
உன் கனவுகள் எல்லாம் அழிந்திடா
வண்ணம் நிலவில் சேகரித்தேன்
உன் நிமிட புன்னகை சிதைந்திடா
வகையில் கண்களில் மூடிவைப்பேன்
பெ:
இதழ்களின் நுனியில் வார்த்தைகள் எல்லாம்
வரிசையில் நிற்கின்றது - அதை
மௌனமும் தடுக்கின்றது
நாணம் ஊறிய ஒற்றை பார்வையில்
மனமும் திறக்கின்றது..
-
அண்ணே
இரண்டாம் வரியில் மென்மைக்கு பதிலா உள் இருந்தால் இன்னும் பொருந்தற மாதிரி தோணுது.
-
புரியலை கோதம்
-
ஒன்னுமில்லேன்னே.. பாடி பாத்தேன். கரெக்டாவே பொருந்துது.
சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ் :D
-
யாரையாவது அதே மெட்டில் பாட சொல்லி கேட்போம் விரைவில் நம் அரட்டை பக்கத்தில் :)
-
எனக்கு என்னமோ மெட்டு ஒத்துவராத போலவே உணர்வாகுது சில இடங்களில் .... :( அனால் கவிதை அமைப்பு அருமை .... பெண்ணுக்கு அமைந்த வரிகளை விட ஆணுக்கு அமைந்தது மித அருமை ;)
-
அப்படியா, சுட்டிக்காட்டினால், தட்ட முயற்சிபேனே
-
பா - 2
படம் - சிட்டிஸன்
பாடல் : மேற்கே உதித்த சூரியனே
பல்லவி :
மீசை முறுக்கி கிளம்பு நண்பா - நாம்
விண்ணை கிழித்து விதி சமைப்போம்
மின்னல் இடிகளின் எதிர்ப்பு வந்தால் - நம்
கண்ணின் நெருப்பால் கதை முடிப்போம்
உன் விரலை தேய்த்து தீ கொழுந்தை ஏற்று
ஒரு விடியல் நாம் விரைந்தே கொள்ள
உன் உயிரை கரைத்து ஒரு யுத்தம் நடத்து
உன் பெயர் தன்னை பிள்ளைகள் சொல்ல
உந்தன் நெஞ்சின் உந்தன் நெஞ்சின் ஊனங்கள் அகற்று
ஊறி வரும் எண்ணம் தன்னில் ஊக்கங்கள் வளர்த்து
சரணம் : 1
மெழுகுவர்த்தி ஏற்று கொண்ட தீதான் தற்கொலைகள் இல்லை
உருகி கொஞ்சம் தீர்ந்தால் வெளிச்சம் ஊறும் கொள்ளை
இதயப்பையில் இதயப்பையில் அச்சம்
இருந்தால் ஏதும் மிச்சம்
துடைத்து எறி வெளியே
துணிந்து வா உளியே
இளமை மோகங்கள் இரவுக்குள் பாழே
இருளை கரைக்க இன்று இறுதி நாளே
பகல்களின் விழிகளில் ஒளி படரட்டும்
படுத்துள இருள்துகள் வெளி அகலட்டும்
இமைகளும் யுத்தத்தில் குத்தும்வாள் ஆகட்டும்..
சரணம் : 2
எச்சில் துளி எச்சில் துளி எல்லாம் எரி அமிலமாகும்
எட்டு வச்சு தோழா எழுந்து முன்னே வாடா
செத்து போக செத்து போக அஞ்சி சிதையாய் தான் வாழ்ந்தோம்
சாவின் கறை போக சலவை நாம் செய்வோம்
வயிற்று குழியினை நிரப்பிட நிலையாய்..
வம்ச தலைகளே அடகுக்கு விலையா ??
வேர்களால் தீமைகள் விரல்களை சுற்றுவோம்
வேஷங்கள் போட்டிடும் உலகையே கட்டுவோம்
விழிகளின் கொதிப்பினில் அடிமை கொப்புளம் உடையட்டும்..
-
உன் விரலை தேய்த்து தீ கொழுந்தை ஏற்று
ஒரு விடியல் நாம் கொள்ள
உன் உயிரை கரைத்து ஒரு யுத்தம் நடத்து
உன் பெயர் பிள்ளைகள் சொல்ல
இங்கு சந்தம் குறைவதாய் ஒரு நெருடல் :o
ஆதி இப்டி எல்லாம் எப்டி எழுதுறீங்க நிஜமாவே புரட்சிகரமான வார்த்தைகள் .. பேசாமல் நீங்கள் திரைக்கு பாடல் எழுதலாம் .
-
பா - 3
படம் : உயிரே
பாடல் : என்னுயிரே என்னுயிரே
பல்லவி:
பெண்ணிலவே பெண்ணிலவே
உன் பேரழகில் ஏ.. ஏ
என் நினைவை உன்னிடமே நான் தந்துவிட்டேன்..
ஜன்னல் மறந்து மூடாதே என் பெண்நிலவே - எழில் பூநிலவே
இளவாலிபத்தில் வரும் காதல் முல்லை - இதன்
வாசனையில் ஒரு கள்ளம் இல்லை - என்
வார்த்தைகளில் எந்த பொய்யுமில்லை வா en நிலவே..
நீ வா நிலவே
ஜன்னல் திறந்துவிடு ஜென்மம் நீளவிடு ஜீவன் வாழவிடு
அனுப்பல்லவி :
நேரமும் நாட்களும் காதல் உலகில் கிடையாதே
நம் சோகமும் துயரமும் சுகங்கள் போல தோன்றிடுமே
நேசம் என்னும் வீனையில் காதல் சுரமே சுரக்குமே
சரணம் : 1
நிலவே என்னை தீண்டிவிட்டாய்
கனவை நிறைத்து புதைத்துவிட்டாய்
நாளும் பொழுதும் உன் நினைவே
என் வானில் நீ இல்லையே...
தோழியே நெஞ்சினில் புதிதாய் இன்று ஓர் தயக்கம்
தோழியே பூவினில் புரியா வகையில் போர் நடக்கும்
தீவிழிகள் இரண்டும் கருகியதே - மென்
இதயத்தில் அமிலம் பொங்கியதே - ஒரு
எரிமலை எலும்பில் புலுங்கியதே - துளி
இரத்தத்தில் புயலலை அது எழும்பியதோ
சாரணம் : 2
இளமயிலே இளமயிலே என் இளமை உன்னை தேடுதே
இனிமயிலே இனிமயிலே என் இனிமையில் உன்னை சூடுவேன்
என் இதயத்தில் அடுப்பினை மூட்டிவைத்தாய்
என் நாளங்கள் மெழுகென உருகவைத்தாய்
என் இளமையை நெருபென சிவக்க வைத்தாய்
என் உயிரினில் உயிரென உறைந்துவிட்டாய்..
ஜன்னல் மறந்து மூடாதே என் பெண்நிலவே - எழில் பூநிலவே
இளவாலிபத்தில் வரும் காதல் முல்லை - இதன்
வாசனையில் ஒரு கள்ளம் இல்லை - என்
வார்த்தைகளில் எந்த பொய்யுமில்லை நீ வா நிலவே
என் கூரையின் மேலே கூடு கொண்டாய்
பெண் சிகரத்தில் ஏற துணிவுதந்தாய்
வழியிலே உன்னையே காணுகிறேன் - உன்
கைதுணையை நான் தேடுகிறேன்..
மலர் தீண்டியதின் வடு ஆறவில்லை
மன் வேதனையின் வலி தீரவில்லை
என் நேசமதி என்றும் தேய்வதில்லை...
சரணம் : 3
இன்ப சோலையில் துயரமே பூக்கும் முல்லை
இங்கு சொர்க்கமொன்று யாவருமே கண்டதில்லை
இன்ப சோலையில் துயரமே பூக்கும் முல்லை
இங்கு சொர்க்கமொன்று யாரும் கண்டதில்லை
பொன் வான் நிலவே.. நீ வா நிலவே..
பொன் வான் நிலவே.. நீ வா நிலவே..
-
நான் கொஞ்சம் பிஸி .... ;D
அருமையான கற்பனை திறன் ... எப்போ திரைப்படத்துக்கு பாடல் எழுதுறதா உத்தேசம்