FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 27, 2012, 02:31:45 PM

Title: உன்னிடம்
Post by: ஆதி on September 27, 2012, 02:31:45 PM
உனைக் காண்கையில்
நானெண்ணியதை போன்றெந்த மாறுதலும் நிகழ்ந்ததில்லை
எல்லாமும் அவையவையாகவே இருந்தன
எனைத்தவிர்த்து..

பேசி உன்னோடு போக்கிய பொழுதுகளினூடே
அலுப்பும், சலிப்பும், மௌனமும் குறுக்கிடாமல் இல்லை..

நீ அருகிருந்த தருணங்களிலும்
மற்ற பெண்கள் மேல் பார்வை படராமலிருந்ததில்லை..

முகில் மூடிய மழைகால வானமோ
ஆலமரத்தில் பூக்கும் குயில் பாட்டோ
ஒரு கவிதை புத்தகமோ
உன் நினைவுகளையும் மீறி
என் தனிமைகளை ஆக்ரமிக்காமல் இருந்ததில்லை..

உன்னைவிடவும் அதிகமாய் சிலவற்றை
நான் நேசிக்காமலில்லை
என்றாலும்
எனை ஈர்க்கும் யாவற்றையும் விட
உன் மீதொரு நிரந்தரமான பிடிப்பு
எனக்கில்லாமலும் இல்லை..
Title: Re: உன்னிடம்
Post by: viswa on September 27, 2012, 05:20:19 PM
உன்னை கண்டதும்தான் ஊஞ்சலாடுகிறது 
ஊமையாய் இருந்த என் மனம் !

தவம் செய்யும் சிலை போலத்தான் நானிருந்தேன் 
நீ இங்கு வரும் வரை !

உன்னிடம் சொல்வதற்கு என்ன
நானென்பது நீயன்றி வேறென்ன ? ;)

                                                   நம்மிடம் வேறென்ன இருக்கிறது இந்த உலகிற்கு தர, அன்பைத் தவிர  ;) :)
Title: Re: உன்னிடம்
Post by: ஆதி on September 27, 2012, 05:41:28 PM
பெயல்
அயல்
இய‌ல்
Title: Re: உன்னிடம்
Post by: ஸ்ருதி on September 27, 2012, 07:00:58 PM
நன்றாக இருக்கிறது ஆதி...

இது என்ன ?

பெயல்
அயல்
இய‌ல்
Title: Re: உன்னிடம்
Post by: Global Angel on September 28, 2012, 01:30:57 PM
இந்த உணர்வு எல்லாருக்குமே இருக்கும் உணர்வுதான் வெளிபடையாக சொன்னால் இதுதான் உண்மையும் கூட ...ஆனால் எது எப்படி இருந்தாலும் எவளோ ஒருத்திக்கோ இல்லை ஒருத்தன் மீதோ அதீத அன்பும் பாசமும் கொள்வதுதான் காதல் ...  மற்ற எந்த குறுகீடுகளாலும் அது மாறபோவது இல்லை ..... அருமையான கவிதை ஆதி .. இயல்பான கவிதையும் கூட ...


பெயல் = கலத்தல்
கயல்  = விழி அல்லது மீன்
இயல் = இயல்பு / இயற்க்கை   

காளையர் பெண்கள் விழிகளுடன் கலந்தால் இயல்பு தான் என்று விஸ்வாவுக்கு பதிலோ ... ஹஹாஹ்