FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழன் on September 27, 2012, 01:14:29 PM
-
என் டைரி எனும்
பூமரத்தில்
மூன்று கவிதைப் பூக்கள் பூத்திருக்கின்றன
உனக்காக
பறித்துப் போக வா
விலையாக உன் முத்தங்களை
சுமந்த படி
------- --------- --------
சென்ற முறை
அதிக நேரம் எடுத்துக் கொண்டாய்
நீ
இம்முறை அதிக நேரம் எடுத்துக் கொள்வேன்
நானென
ஒன்றுக்கொன்று சண்டை இட்டுக் கொள்கின்றன
உன்னை முத்தமிடும் என்
மேலுதடும் கீழுதடும்
.............. ......................... ..............
யுத்தம் நடந்தால்
ரத்தம் அல்லவா வடியும்
இதழ்களின் யுத்தத்தில்
தேன் வடிகிறதே
-
;D ;D ;Dபார்த்து ஈ மொய்க்க போகிறது ... முத்த கவிதை சத்தம் இல்லாத இச்சு கவிதை ;D
-
நல்ல வரிகள் தமிழா !!
வாழ்த்துக்கள் !!
டைரி என்பது மட்டும் நெருடலாய்.....
குறிப்பேடு என குறிப்பிடலாமே !!
-
romba nalla iruku thamizhan :)
-
//சென்ற முறை
அதிக நேரம் எடுத்துக் கொண்டாய்
நீ
இம்முறை அதிக நேரம் எடுத்துக் கொள்வேன்
நானென
ஒன்றுக்கொன்று சண்டை இட்டுக் கொள்கின்றன
உன்னை முத்தமிடும் என்
மேலுதடும் கீழுதடும்
///
ரொம்ப சுகமான கவிதை தமிழன், மிக ரசித்தேன்
காதல் என்று யோசிக்கும் போதே மனசு மென்மையாகி, வயசு 10 குறைஞ்சுடுது
தொடர்ந்து அசத்துங்கள், வாழ்த்துக்கள்
-
நல்லா இருக்கு தமிழன்
வாழ்த்துக்கள்
-
அழகான காதல் வரிகள்...
முத்தத்திற்கான யுத்தம் நல்ல பொருத்தமான தலைப்பு.
-
Nice poem Super ha irukku ;)