FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: தமிழன் on September 27, 2012, 12:57:24 PM

Title: பார‌தி க‌ண்ட‌ பார‌த‌ம்
Post by: தமிழன் on September 27, 2012, 12:57:24 PM
பாரதி முண்டாசுக் கவிஞனே
நல்ல வேளை நீ இல்லை இன்று
இருந்திருந்தால்....
தமிழ் நாட்டின் தனிப்புலவன்
தற்கொலை செய்திட்டான்
என்று செய்தி வந்திருக்கும்

நீ கண்ட கனவெல்லாம்
கனவாக போய் விட்டதடா
புரட்சிக் கவிஞா
கடல் கடலாய் நீ கண்ட கனவெல்லாம்
கடல்நுரையாய் கரைந்திட்டது இன்று

காவிரி தென்பெண்ணை பாலாறு இன்று
காய்ந்து விடக்குது
மணல் அள்ளும் மணலாறாய்
வையம் போற்றிய வைகையவள்
வாய்க்காலாகி வடிந்து கொண்டிருக்கிறாள்
காவிரித்தாய் க‌ர்நாட‌க‌த்திட‌ம்
கையேந்தி நிற்கிறாள்

ஆயிர‌ம் உண்டிங்கு
சாதியில்லை இங்கே என்றாயே
சாதியை த‌விர‌ வேறெதுவுமில்லை இன்று
சாதி சாக்க‌டையாய் ம‌ண‌க்குத‌ய்யா

ஆல‌ய‌ம் செய்வோம்
க‌ல்விச் சாலைக‌ள் செய்வோம்
நீ சொன்ன‌ த‌மிழ் புரியாத‌ த‌மிழ‌ர்க‌ள்
காசுக்காக‌ க‌ல்வியையும்
மாசுக்காக‌ க‌ட‌வுளையும்
வீதி தோறும் உண்டாக்கின‌ரே

பாருக்குள்ளே ந‌ல்ல‌ நாடு
பார‌த‌ம் என்றாய்
பாருக்குள்ளே ந‌ல்ல‌ பார்க‌ள் நிறைந்த‌ நாடு
பார‌த‌ம் இன்று
பாலாறுக்குப் ப‌திலாக‌
பீராறு ஓடுத‌ய்யா பார்க‌ள் தோறும்

பார‌த‌ம் ந‌ட‌ந்த‌ நாடு இது
ம‌ஹாபார‌த‌ம் ந‌ட‌ன்த‌ நாடு
இன்று பாஞ்சாலிக‌ள் இருக்கின்ற‌ன‌ர் ஆனால்
த‌னித்த‌னியே துரியேத‌ன‌ன் ச‌பையும் இல்லை
துச்சாத‌ன‌ர்க‌ளும் இல்லை
அதை ச‌பைக்கு ப‌திலாக‌ நாங்க‌ள்
ச‌ட்ட‌ச‌பையை அமைத்து விட்டோம்

பார‌தியே நீ ம‌றுப‌டி பிறப்பதென்றால்
உன் க‌விதை புத்த‌க‌ங்க‌ளை
ப‌ர‌ண்மேல் வீசிடு
கையில் சாட்டையுட‌ன் பிற‌ந்திடு

பாட்டுக்கு திருந்தாத‌ பார‌த‌ம்
சாட்டைக்கு திருந்திடும்
ப‌ட்டொளி வீசும் பார‌த‌க்கொடி
தேவையில்லை ந‌ம‌க்கு
கொடி ப‌ற‌க்கும் அந்த‌
க‌ம்பை ம‌ட்டும் கையில் எடுத்திடு
Title: Re: பார‌தி க‌ண்ட‌ பார‌த‌ம்
Post by: ஆதி on September 27, 2012, 01:11:30 PM
சாட்டையோடு பாரதி பிறந்தாள் சரியாக சுழற்றுவானா தெரியவில்லை

ஆனால் உங்கள் சாட்டை சரியாகவே சுளீர் சுளீர் என்று சுழன்றிருக்கிறது

ஒரே ஒரு ஆலோசனை முதல் வார்த்தை மட்டும் தேவையில்லை அது மிகையாக இருக்கிறது முட்டாசு கவிஞன் என்று சொன்னாலே போதுமே

பாரும் தம்மும் சேர்ந்து பாரதம் ஆகிடுச்சு இன்று, செமயான சவுக்கடி தமிழன்

தொடர்க நடை, பாராட்டுக்கள்
Title: Re: பார‌தி க‌ண்ட‌ பார‌த‌ம்
Post by: Global Angel on September 27, 2012, 01:13:25 PM
தமிழன் மீள் வரவுக்கு நன்றிகள் ...  ஒரு தாய்நாட்டின் சீரழிவை பொறுக்கமுடியாத ஒரு நாட்டு பற்றாளன் குமுறல் கவிதை வடிவில் அருமை .... அடி உதவுவது போல் அண்ணன் தம்பியும் உதவமாட்டான் என்று சும்மாவா சொனார்கள் ... அடிச்சு பேசுங்கப்பா  :D
Title: Re: பார‌தி க‌ண்ட‌ பார‌த‌ம்
Post by: தமிழன் on September 27, 2012, 01:23:44 PM

ஆதி
உங்கள் பாராட்டுக்கு நன்றி,
முண்டாசுக்கவிஞ என்று சொன்னாலே போதும் என்று சொல்லி இருக்கிறீர்கள்.
இன்றைய நவீன இளைஞர்கள் மத்தியில் பாரதி என்றால் யார் என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். பாரதியா அடுத்த வீட்டு பிகரா என்று கேட்டாலும் கேட்பாங்க.
வெளினாட்டில் பிறந்து வெளி நாட்டில் படித்து அந்த கலாசாரத்தில் வழரும் ஒரு சிலருக்கு முண்டாசு கவிஞன் என்றால் புரியாது.
அது தான் ஒரு சேப்டிக்காக பாரதியையும் சேர்த்தேன். :) :)

ஏஞ்சல் நன்றி  
Title: Re: பார‌தி க‌ண்ட‌ பார‌த‌ம்
Post by: ஆதி on September 27, 2012, 01:28:42 PM
புரிந்து கொண்டேன் தமிழன், ஆனால் அந்த வார்த்தை தனியாக இருக்கிறது

பாரதி முண்டாசு கவிஞனே படிக்க ஒரு மாதிரி இருக்கு தமிழன்

முண்டாசு கவியே பாரதி இப்படி ஏதாவது மாற்றி பாருங்கள்

வார்த்தை தனியாக தெரியாது
Title: Re: பார‌தி க‌ண்ட‌ பார‌த‌ம்
Post by: supernatural on September 28, 2012, 01:56:05 PM
kalikaalaththirku etra varigal..nalla varigal..