FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 26, 2012, 04:30:16 PM

Title: வாமனக்கவிதைகள் - 3
Post by: ஆதி on September 26, 2012, 04:30:16 PM
பொருள் மெய்
பொருள் மை
பொருள் ஈ
பொருள் வை
பொருள் நேர்
Title: Re: வாமனக்கவிதைகள்
Post by: ஸ்ருதி on September 26, 2012, 10:27:14 PM
விளக்கம்??  :'(
Title: Re: வாமனக்கவிதைகள்
Post by: Anu on September 27, 2012, 07:08:06 AM
பொருள் மெய்
பொருள் மை
பொருள் ஈ
பொருள் வை
பொருள் நேர்
vaamana kavithai na enna aadhi?
Title: Re: வாமனக்கவிதைகள்
Post by: ஆதி on September 27, 2012, 11:53:47 AM
வாமன அவதரம் இருக்கு இல்லையா, அதை கொண்டு தலைப்பிட்டேன்

சின்ன கவிதை ஐந்து வரி ஆறு வார்த்தைகள், பொருள் எனும் வார்த்தை மட்டும் ஐந்து முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது

1) இறையே மெய்யான பொருள்

2) மற்ற உலக இச்சைக்காக ஈட்டும் பிற பொருள் யாவும் உன்னை மை இருளாக பாதைக்கே கூட்டி செல்கிறது

3) பிறர்க்கு மற்றவர்க்கு கொடுக்கும் அனைத்து நல்ல பொருளாய் இருக்கட்டு

4) அப்படி நல்லவையாய் நீ கொடுத்து, நல்ல பொருளை நீ உனக்கு சேர்த்து வைத்தால்

5) வீடுபேறும் அந்த மெய்பொருளான இறைவனையும் அடைவாய்


Title: Re: வாமனக்கவிதைகள்
Post by: Gotham on September 27, 2012, 12:11:34 PM
இறுதியாக பொருள் நிரை என்பதை விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன் ஆதி.
Title: Re: வாமனக்கவிதைகள்
Post by: Global Angel on September 27, 2012, 12:42:18 PM
நா வாரத்துக்குள்ளே பொருள் விளக்கம் சொல்லியாச்சு என்ன பின்னூட்டம் போட? நல்லா இருக்கு ஆதி ... இத மட்டும்தான் சொல்ல முடியும் 
Title: Re: வாமனக்கவிதைகள்
Post by: ஆதி on September 27, 2012, 12:59:16 PM
அதில் இன்னும் பொருள் இருக்கே ? அதை கண்டு பிடிங்க, நான் வேணும்னா முறைப்படி புகார் தருகிறேன் :)
Title: Re: வாமனக்கவிதைகள்
Post by: Global Angel on September 27, 2012, 01:03:10 PM
நான் படித்தபோது எனக்கு தோன்றிய பொருளைத்தான் நீங்க சொல்லி இருக்கீங்க .... அப்புறம் எதை சொல்ல .. இனி சொன்ன நீங்க சொன்னத வச்சு சொனதா போய்டும் ;)
Title: Re: வாமனக்கவிதைகள்
Post by: Anu on September 27, 2012, 01:45:53 PM

nice aadhi :)ivlo aazndha vilakkam irukka ..
Title: Re: வாமனக்கவிதைகள்
Post by: ஆதி on September 27, 2012, 02:17:16 PM
ஆழமான விளக்கம் இருப்பதால் தான், இது வாமன கவிதை அக்கா

நன்றிங்க அக்கா
Title: Re: வாமனக்கவிதைகள்
Post by: ஆதி on September 27, 2012, 05:27:27 PM
அறிவேனுன் நோநெஞ்சை அறியார் அறியார்
தறிநெய்நுண் இழையாகும் துணியாய் ஆகும்
திரிதேர்வு தரும்துயரம் சரியாய் செய்தாய்
விரியாவோ டையாய்நொ டியாய்விரிபாய் ஆறாய்
Title: Re: வாமனக்கவிதைகள் - 2
Post by: ஸ்ருதி on September 27, 2012, 06:59:14 PM
இதற்குள்   இவ்வளவு விளக்கமா

அருமை  :)
Title: Re: வாமனக்கவிதைகள் - 2
Post by: Global Angel on September 28, 2012, 02:27:34 PM
அறிவே உன் ஆளுமைகளை அறியாதவர் அறியமாட்டார் ..ஒரு நூல் இழை தறியில் அகபட்டு  எப்படி துணியாகிறதோ... அது போல் ஏற்படும் துன்பங்களை சோதனையாய் எண்ணாது ஒரு பரீட்ச்சயாய் எண்ணி சரியாய் செய்தால் சிறு ஓடை கூடா ஆற்றை போல் பெருக்கெடுத்து ஓடும் அறிவு ஆறாய்...

யமடி என்ன தத்துவம் .. அருமை ஆதி
Title: Re: வாமனக்கவிதைகள் - 2
Post by: ஆதி on September 28, 2012, 03:26:37 PM
ஹி.. ஹி..

சரியான புரிதல், ஆனால் இந்த கவிதையில இன்னொரு அற்தமிருக்கு

நண்பன் ஒருவருக்கு ஒரு விடயத்தை குறித்து லெட்டர் எழுதனும், ஆனால் அது வேறு யாருக்கும் புரிய கூடாது, அப்படி ஒரு சூழலில் எழுதினேன், படிக்கிறவங்க எல்லாருக்கும் புரிய கூடாது என்பது மட்டுமே நோக்கம்

செய்யுள் வடிவத்தில் எழுதினேன்

இந்த கவிதை எழுதிய போது எனக்கு வயசு பதினெட்டு இருக்கும், நானா இப்படி எழுதினேனு நானே வியக்கும் கவிதை அவ்வளவு பொருள் இருப்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன்

வார்ததைகள் வசப்பாடாதவன் எழுதினாலே இப்படினா, செந்நா புலவர்கள் வசம் வாசம் செய்யும் தமிழின் செறிவு எப்படியெல்லாம் இருக்கும், கடவுளை போலத்தான் அன்னை தமிழும் அவனினவன் என்று பாரபட்சம் பார்ப்பதில்லை அவள் எல்லோருக்கும் வாரி வாரி வழங்கிறாள்
Title: Re: வாமனக்கவிதைகள் - 2
Post by: Gotham on September 28, 2012, 03:38:33 PM
பதினெட்டு வயசுங்கறீங்க...


யாருக்கும் புரியக்கூடாது.. நண்பருக்கு மட்டும் புரியணும்ன்கறீங்க.. நண்பர் ஆணா இருக்க வாய்ப்பில்லையே?  8)
Title: Re: வாமனக்கவிதைகள் - 2
Post by: ஆதி on September 28, 2012, 04:02:44 PM
நண்பர்க்கு தான் கோதம், நான் காதலிச்ச பொண்ணுக்கு தமிழ் படிக்க தெரியாது, அப்படி இருக்க சாதாரண கவிதையே புரியாது, இது புரியுமா ? :D
Title: Re: வாமனக்கவிதைகள் - 3
Post by: ஆதி on October 14, 2012, 06:59:02 AM
காண கிடைக்கும்
அல்கு படர் உலந்த
மல்கு கடற் பதர்
நெய்தல் ஊர
குறிஞ்சி யெண்ணி
பாலை பாடி
முல்லை யென்ப
மருத சேறில்
வலவன் ஓட
கயல் தான்
குயில் தான்
மயில் தான்
நயில் தானென உரைப்ப
முயல் தான் என்ன
பெயல் அறிய பெயல்
Title: Re: வாமனக்கவிதைகள் - 3
Post by: Global Angel on October 15, 2012, 02:30:47 AM
என்ன பண்ண தடுமாற்றம் என்பதும் புரிதல் என்பதும் தடம் தடு மாறுவது வழக்கம்தானே ... அதிலும் பெண்களை கண்டாலோ சொல்லவும் வேண்டுமா ..  நன்று ஆதி
Title: Re: வாமனக்கவிதைகள் - 3
Post by: ஆதி on October 15, 2012, 01:11:23 PM
பின்னூட்டத்துக்கு நன்றிங்க‌