FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 26, 2012, 03:33:25 PM
-
ஒன்றொன்றின் முடிவிலும்
தேவைப்படுகிறது ஒரு மூன்றாம்நாள்
அதிலிருந்து உயிர்த்தெழ
ஒவ்வொரு உயிர்த்தெழுதலிலும்
தேவைப்படுகிறான் ஒரு புத்தன்
அதில் விழித்தெழ
-
பொருள் காண ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கே....இப்படி எல்லாம் எழுத இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்
-
ஒன்றொன்றின் முடிவிலும்
தேவைப்படுகிறது ஒரு மூன்றாம்நாள்
அதிலிருந்து உயிர்த்தெழ
ஒவ்வொரு உயிர்த்தெழுதலிலும்
தேவைப்படுகிறான் ஒரு புத்தன்
அதில் விழித்தெழ
Superb aadhi.
kurung kavithai naalum pala arthangalai solludhu..
aazntha arthamulla kavithai.
sindhithu sirappa ezhudhi irukinga..:)
-
அருமை ஆதி ... இயேசு சிலுவையில் அறயபடதை வைத்து ... ஒரு . இழப்பு ஓர் ஒரு துரோகம் ஓர் எந்த விடயமானாலும் அதில் இருந்து மீள சில நாட்கள் அவசியம் தேவைபடுகின்றது என்பதை சொல்லி... புத்த தத்துவங்களை அந்த விளித்து எழுதளுக்கு அறிந்தோ அறியாமலோ பயன்படுத்தி கொள்கிறான் என்பதை அருமையாக சொல்லி இருகின்றீர்கள் ... அனால் இதோடு முடிந்து விடுவதில்லை
விளித்து எழும் புத்தனும்
விரைவில் ஓடி விடுவான் சமாதிக்கு
சுடலை ஞானம் எல்லாம்
சுடுகாடு விட்டு போகும்வரைதான் ..
-
நன்றி ஸ்ருதி, நன்றி அனு அக்கா
--------------------
சரியா புருஞ்சுகிட்டீங்க, இன்னும் கொஞ்சம் மீதி இருக்கு
இறந்த யேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுதார், ஒரு துரோகத்தில் இரிந்தோ, ஒரு வீழ்ச்சியில் இருந்தோ, ஒரு துயரத்தில் இருந்தோ, ஒரு புகழ் போதையில் இருந்தோ, மீண்டு மீட்டுக் கொண்டு எழு அப்படி ஒரு மூன்றாம் நாள் தேவைப்படுகிறது
மீட்டு கொண்டு மீள் எழுதாந்தால் மட்டும் போதுமா, இனி அப்படி ஒரு நிலைக்கு திரும்பிவிடாமல் இருக்க ஒரு விழிப்பு நிலை தேவை, புத்தன் என்றால் விழிப்புற்றவன் என்பது பொருள், உயிர்த்தெழுத மட்டும் போதாது அந்த உயிர்த்தெழுதலோடு விழிப்புநிலையும் தேவை இல்லையென்றால் மீண்டும் ஒரு சாவு தான் என்று சொல்ல முயன்றேன்
பின்னூட்டத்துக்கு நன்றிங்க
-
அதே தான் அப்டி பார்த்தா எவளவோ புத்தன் உருவாகி இருப்பான்... தவறுகள் துரோககங்கள் எது என்றாலும் குறைந்திருக்கும் .... அவன் வெளி வாரத்துக்கு மட்டும் அவனுள் தூங்கி இருக்கும் புத்தனை பயன்படுத்திக்கொண்டு .. வந்ததும் மீண்டும் உறங்க வைத்து விடுவான் ... மீண்டும் அதே தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன அதே மனிதனால் இல்லையா