FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dong லீ on September 25, 2012, 10:42:06 PM

Title: இன்று(25/09/12) என்னிடம் கவிதை இல்லை
Post by: Dong லீ on September 25, 2012, 10:42:06 PM
எனக்கு அவள் கொஞ்சமும் பரிட்சயம் இல்லாதவள்
அவளை நான் பார்த்தது இல்லை
முயன்றால் அவளை உன் வசமாக்கி
விடலாம் என்று சிலர் கூற
நானும் முயற்சிகளை முடிக்கி விட்டேன்

முதல் முயற்சி
அவள் கொஞ்சம் என் வசம் வந்துவிட்ட
உணர்வு எனக்குள் ..
அடேங்கப்பா ..
இனி வெற்றி தான் என்ற பெருமிதம்
மனதில் ..

தொடர்ந்து பல முயற்சிகள்
சில நாட்கள் என் வசம் இருக்கிறாள் 
பல நாட்கள் காணாமல் போகிறாள்

நேற்று என்னை கட்டிஅனைத்து
கொண்டவள்
இன்று என்னை தனியாக
தவிக்க வைத்து விட்டாள்..

மீண்டும் அவளை என் வசமாக்க
முயற்சியுடன் காத்திருக்கிறேன் ..
இன்னும் எழுதி முடிக்காத இந்த கவிதையுடன்
Title: Re: இன்று என்னிடம் கவிதை இல்லை
Post by: Gotham on September 25, 2012, 10:46:29 PM
கவிதைக்கு பொய் அழகு.

கவிதையில்லை என்னும் பொய்யே இங்கும் அழகு.

வசப்படுவாள் விரைவிலேயே
வானவில்லின் வண்ணங்களாய்
மழைத்துளியில் சாரலாய்
மனதுள் வாசமாய்
என்றென்றும் வசப்படுவாள்
கவிதையாய்.

சின்ன சின்ன பிழைகள் பார்த்துக்கோங்கண்ணே..! :)
Title: Re: இன்று என்னிடம் கவிதை இல்லை
Post by: ஆதி on September 26, 2012, 01:27:35 PM
http://www.friendstamilchat.com/forum/index.php?topic=8178.15

இங்க வாங்க, உங்க கவிதையை வைத்துதான் பேச ஆரம்பிச்சிருக்கேன்

கவிதை குறித்த பின்னூட்டமல்ல இது, அது தனியா எழுதுறேன்

Title: Re: இன்று என்னிடம் கவிதை இல்லை
Post by: ஸ்ருதி on September 26, 2012, 10:33:05 PM
நல்ல சிந்தனை
இனி கவிதை எழுதுன்னு சொல்ல வேண்டியதே இல்லை
பெரிய கவிஞர்களே வாழ்த்துவதை பார்ப்பதே பெரும் பாக்கியம்...
சந்தோஷமா இருக்கு  :)
Title: Re: இன்று என்னிடம் கவிதை இல்லை
Post by: Anu on September 27, 2012, 07:04:04 AM

வசப்படுவாள் விரைவிலேயே
வானவில்லின் வண்ணங்களாய்
மழைத்துளியில் சாரலாய்
மனதுள் வாசமாய்
என்றென்றும் வசப்படுவாள்
கவிதையாய்.

kavithai illaiyena miga azhagaana kavithaiya solli irukinga sri :)
gotham sonnatha naan vazhi mozhiyaren.