FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: viswa on September 25, 2012, 08:36:08 PM

Title: மரணம் பிடிக்கிறது எனக்கு...
Post by: viswa on September 25, 2012, 08:36:08 PM
மாதுளையின் நிறம்
மறக்கிறேன் உன்
செவ்விதழ்களை
கண்ட பின்பு ..

பூக்களின் மென்மை
பெரிதல்ல உன்
கைகோர்த்த போது
உணர்கிறேன்

நிலத்திலும் மீன்கள்
வாழுமா ?உன் கண்களை
கண்ட பின்பு
அறிந்தேன்

மரணம் பிடிக்கிறது எனக்கு
நீ என்னிடம் பேசாத
நாட்களில் .. :)
Title: Re: மரணம் பிடிக்கிறது எனக்கு...
Post by: Gotham on September 25, 2012, 08:50:59 PM
மரணத்தையும் நேசிப்பவன்
நீ இல்லா
தருணங்களில்

அழகு விஸ்வா..

சில சொற்களை இடம்மாற்றியிருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும்.

உணர்கிறேன் - பெரிதல்ல-க்கு பின் போட்டிருந்தால்

அறிந்தேன் - வாழுமா? பின் போட்டிருந்தால்..

இன்னும் முந்நூறுக்கும் மேல் முத்தங்கள் மிச்சமிருக்கிறதே.! தொடருங்கள் அன்பரே.
Title: Re: மரணம் பிடிக்கிறது எனக்கு...
Post by: supernatural on September 28, 2012, 02:04:15 PM
kaathal vanthal maranam kooda pidikkum ..unmai thaan..
nalla varigal..
Title: Re: மரணம் பிடிக்கிறது எனக்கு...
Post by: Global Angel on September 28, 2012, 02:12:11 PM
காதல் கொண்டால் இந்த ஆண்கள் அழும்பு தாங்காது .... அழகு கவிதை விஷவா
Title: Re: மரணம் பிடிக்கிறது எனக்கு...
Post by: Gotham on September 28, 2012, 02:29:16 PM
பெண்கள் அலும்பே பண்ணமாட்டாங்களோ?
Title: Re: மரணம் பிடிக்கிறது எனக்கு...
Post by: ஆதி on October 15, 2012, 03:56:48 PM
நன்று விஸ்வா
Title: Re: மரணம் பிடிக்கிறது எனக்கு...
Post by: Global Angel on October 15, 2012, 06:36:26 PM
 :o :o :o