FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on September 25, 2012, 11:49:51 AM

Title: கருவிழிச்சிறை
Post by: Anu on September 25, 2012, 11:49:51 AM
எப்பொழுதும்
அணிந்து கொள்கிறாயே..
எப்பொழுது
அவிழ்க்க போகிறாய்..
உன் வெட்கங்களை?
* * *
காதல் அஹிம்சை
எவன் சொன்னான்?
உன் விழிச்சிறையில்
அடிபட்டு கிடக்கும்
என் இதயத்தை
கேட்டுப்பார்..
* * *
எனக்காக கொஞ்சம்
மாற்றிக்கொள்...
உன் விழிகளை
சைவத்திற்கும்..
உன் இதழ்களை
அசைவத்திற்கும்..
* * *
எத்தனை நேரம்
பேசிக்கொண்டாலும்
பிரியும் நேரம்
உன் விழிகள்
பேசும் மௌனத்தில்
படர்ந்து இருக்கும்
நம் காதல்.


எழுதியவர் தினேஷ்
Title: Re: கருவிழிச்சிறை
Post by: Global Angel on September 25, 2012, 01:03:58 PM
Quote
எப்பொழுதும்
அணிந்து கொள்கிறாயே..
எப்பொழுது
அவிழ்க்க போகிறாய்..
உன் வெட்கங்களை?
* * *
காதல் அஹிம்சை
எவன் சொன்னான்?
உன் விழிச்சிறையில்
அடிபட்டு கிடக்கும்
என் இதயத்தை
கேட்டுப்பார்..
* * *
எனக்காக கொஞ்சம்
மாற்றிக்கொள்...
உன் விழிகளை
சைவத்திற்கும்..
உன் இதழ்களை
அசைவத்திற்கும்..
* * *
எத்தனை நேரம்
பேசிக்கொண்டாலும்
பிரியும் நேரம்
உன் விழிகள்
பேசும் மௌனத்தில்
படர்ந்து இருக்கும்
நம் காதல்

எது என்று கூற முடியாத அளவுக்கு எல்லாமே அருமை அனும்மா பகிர்வுக்கு நன்றிகள்
Title: Re: கருவிழிச்சிறை
Post by: Anu on September 27, 2012, 09:11:38 AM
paaraatiyamaiku nandri Rose dear