FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 25, 2012, 03:39:24 AM

Title: நீயும் ஐஸ்கிரீமும்
Post by: ஆதி on September 25, 2012, 03:39:24 AM
வெளிச்சத்தை இழக்க ஆரம்பித்த‌
சாயுங்கால பொழுதொன்றில்
உனக்காக காத்திருந்தேன்

இருட்செறிந்த ஒரு வனாந்தரத்தில்
திசை தவறியவர்களை
சரியான பாதையில் சேர்க்கும்
தேவதையின் கருணையோடு
வந்தாய்

குழும துவங்கியிருந்த‌
இருளின் அடர்த்தியில்
விழிகளை அகல விரித்து
உனை பார்க்க முயன்ற‌
மெழுகுவர்த்திகள் ஒளி மங்கின‌

உனது வெளிச்சம்
அவற்றின் கண்களை
கூசியிருக்க வேண்டும்

என் எதிரே
ஒரு இளவரசியின் தோரணையோடு
ரம்மியமாய் அமர்ந்தாய்

மங்கிய வெளிச்சத்தில்
உன் பூ வதனத்தை
நெருக்கமாய் அமர்ந்து ரசித்தலின்
சுகம் அலாதிதான்

இனி இந்த நிமிடங்கள்
என்னுடையவை

இனி உன் ஒவ்வொரு
பாவனையும் என்னுடையவை

இனி உன் ஒவ்வொரு
புன்னகையும் எனக்கானவை

பாதார்த பட்டியலை எடுத்து
ஆளுக்கொரு ஐஸ்கிரீம்
ஆடர் செய்துவிட்டு
மீண்டும் என்னை பார்த்தாய்
அடி!
எப்படி கற்றாய்
அப்படியொரு பார்வை பார்க்க ?
நுண்மீதமுமின்றி தொலைந்துவிட்டேன்

நான் உருகி கொண்டிருந்த போதே
உன் கன்னங்கள் போன்ற‌
கண்ணாடி கோப்பைகளில்
உன் மேனியின் மென்மை கொண்ட‌
ஐஸ்கிரீம் வந்தது

நீ உண்ண ஆரம்பித்தாய்

உன் பார்வையின் லாவகத்தை
கைகளில் உள்ள ஸ்பூனுக்கும்
கற்று கொடுத்துவிட்டாய் போலும்
எப்படி எனக்கு வலிக்காமல்
என் மனதை மெல்ல தின்கிறாயோ
அப்படி ஐஸ்கிரீமையும்
நளினமாய் தீர்த்துக் கொண்டிருக்கிறாய்
Title: Re: நீயும் ஐஸ்கிரீமும்
Post by: Anu on September 25, 2012, 06:28:14 AM
உனது வெளிச்சம்
அவற்றின் கண்களை
கூசியிருக்க வேண்டும்

உன் பார்வையின் லாவகத்தை
கைகளில் உள்ள ஸ்பூனுக்கும்
கற்று கொடுத்துவிட்டாய் போலும்
எப்படி எனக்கு வலிக்காமல்
என் மனதை மெல்ல தின்கிறாயோ
அப்படி ஐஸ்கிரீமையும்
நளினமாய் தீர்த்துக் கொண்டிருக்கிறாய்
superb..
Title: Re: நீயும் ஐஸ்கிரீமும்
Post by: Global Angel on September 25, 2012, 01:01:00 PM

Quote
எப்படி எனக்கு வலிக்காமல்
என் மனதை மெல்ல தின்கிறாயோ
அப்படி ஐஸ்கிரீமையும்
நளினமாய் தீர்த்துக் கொண்டிருக்கிறாய்

 அற்புதமான வரிகள் ....ஆனா மனதை வலிகமால் எந்த காதலியும் காதலனை தின்பதிலையே ...ஹிஹி

Quote
அடி!
எப்படி கற்றாய்
அப்படியொரு பார்வை பார்க்க ?
நுண்மீதமுமின்றி தொலைந்துவிட்டேன்


அயோ பாவம் ஒரு பார்வைக்கே இப்டின்னா ... ஹிஹி  அருமை ஆதி உங்களுக்கு காதல் கவிதை மிக சிறப்போ சிறப்பாக வருகிறது ;)
Title: Re: நீயும் ஐஸ்கிரீமும்
Post by: ஆதி on September 25, 2012, 01:54:02 PM
நன்றிங்க அனு அக்கா

--------------

காதலில் விழும் பொழுதும் காதல் கை கூடி விட்ட பிறகு மனதுக்கு வலிக்காமல் தான் காதலியின் பார்வை அதனை விழுங்கும்

ஆனால் தோல்வியில் துயருறும் போது வலி சதையோடு பெயர்ந்த நகம் போல இருக்கும்

கடற்கரை தான், நான் எழுதிய கவிதைகளில் எனக்கு திருப்தியானதாய் இருந்த காதல் கவிதை

அதை தாண்டி ஒன்று எழுத வேண்டும்

ஆனால் இந்த கவிதையில் அது முடியவில்லை, நேற்று இரவு மாங்கனி உட்பட மூன்று கவிதை எழுதினேன், அதில் ஒன்று தான் பதிந்தேன்

இன்னொரு க‌விதை ரொம்ப‌ ரொம்ப ரொமான்டிக்கா இருக்கும்

சரி அது எல்லாம் என் வலைப்பூவில் போட்டுக்கலாம் நு விட்டுடேன்

ரொம்ப நன்றிங்க

இந்த கருவை தந்தது நீங்க தானே அதற்கு சிறப்பு நன்றிகள்
Title: Re: நீயும் ஐஸ்கிரீமும்
Post by: Global Angel on September 25, 2012, 02:03:12 PM
உங்க வலை பூவில போடுங்க இங்கும் போடுங்க ... கரும்பு தின்ன கூலி கேட்க மாடோம்லே ... ஹிஹி
Title: Re: நீயும் ஐஸ்கிரீமும்
Post by: Thavi on September 25, 2012, 10:31:36 PM
AADHI NICE peom guru keepwirte more
  கதிரவனை கண்டால்
கரைந்து போகும் -ஐஸ்
அன்பே உன் பாசத்தை கண்டால் 
கரைந்து போகிறேன் -நான்