FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dong லீ on September 24, 2012, 10:44:28 PM

Title: கதை
Post by: Dong லீ on September 24, 2012, 10:44:28 PM
எறும்புகள் இரண்டு
காதலில் விழ
குறும்புகளுடன் அவை செய்யும்
காதல் ..ஒரு சிறு கற்பனை

உலகின் அழகிய இடத்திற்கு
உன்னை அழைத்து செல்கிறேன்
என் கண்ணே
என்றது ஆண் எறும்பு
பெண் எறும்பு நாணத்துடன்
வர
எறும்புகள் சென்றடைந்த
அந்த அழகிய இடம்
நித்திரையில் இருக்கும்
பெண்ணின் முகம்

நெற்றியில் நடந்து செல்கையில்
இது போன்ற மெல்லிய பிரதேசத்தில்
என் கால்கள் நடந்தது இல்லை
என்றது பெண் எறும்பு

ஆண் எறும்பு
ரகசியமாய் முத்தமிட
அடர்ந்த புருவத்திற்குள்
அழைத்து செல்ல முயல
பெண் எறும்பு
விளையாட்டாய்
மூக்கின் மேல் அமர்ந்து
வ‌ழுக்கி கொண்டே
கன்னம் சென்றது

ஏமாற்றம் அடைந்த
ஆண் எறும்பு
மெல்ல இறங்கி கன்னத்தை
நெருங்கிய வேளையில்
திடீரென முகத்தில் ஏதோ மாற்றம்
கனவு கண்டு அந்த பெண்
சிரிக்க
ஆண் எறும்பு  கன்னக்குழியில் விழுந்தது ...


சிரிப்பு முடிந்து குழி மறைய
வெளியில் வந்து பார்த்தால்
பெண் எறும்பு காணவில்லை

பெண் எறும்பு 
உதட்டில் தஞ்சம் அடைய
ஆண் எறும்பு
அங்கு சென்று
அருகில் சென்று
முத்தமிட முயல
பெண் எறும்பு  இறங்கி
கழுத்தில் சென்று ஒளிந்து கொண்டது

நேரம் ஆகியும் தன்னைத் தேடி வரவில்லையே என்று
பெண் எறும்பு 
மெல்ல மேல் ஏறி சென்று பார்த்தால்
ஆண் எறும்பு  பெண்ணின்
உதட்டைச் சுவைத்துக் கொண்டிருந்தது

சினம் கொண்ட பெண் எறும்பு 
பெண்ணை நாடியில் கடிக்க
பெண்
விழித்து கொண்டு தள்ளி விட்டாள்..

கீழே விழுந்த பெண்  எறும்பு 
கோபமாய் வேகமாய் நடக்க
ஆண் எறும்பு
மன்னிப்புக் கேட்டுக்கொண்டே பின்னால் சென்றது
Title: Re: கதை
Post by: Gotham on September 24, 2012, 10:51:57 PM
ஹாஹா.. நல்ல எறும்புக் கதை. ஒரு அழகிய பெண்ணுடலில் சரசமாடும் இரு எறும்புகள்.

அண்ணே.. எங்கியோ போய்டீங்கண்ணே..!

நீங்கல்லாம்.. நல்லா வருவீங்கண்ணே.. வருவீங்க..
Title: Re: கதை
Post by: ஆதி on September 24, 2012, 11:23:26 PM
ஹா ஹா ஹா

//நேரம் ஆகியும் தன்னைத் தேடி வரவில்லையே என்று
பெண் எறும்பு
மெல்ல மேல் ஏறி சென்று பார்த்தால்
ஆண் எறும்பு  பெண்ணின்
உதட்டைச் சுவைத்துக் கொண்டிருந்தது//



ஆம்பளையா பொறந்துட்டா எறும்பா இருந்தாலும் சபலபுத்தியிருக்கும் என்று நகைச்சுவையோடு சொல்லிய விதம் மிக அருமை

//கீழே விழுந்த பெண்  எறும்பு
கோபமாய் வேகமாய் நடக்க
ஆண் எறும்பு
மன்னிப்புக் கேட்டுக்கொண்டே பின்னால் சென்றது//

காதலிக்கும் போது எற்ம்பாய் இருந்தாலும் செய்த தவறுக்கு பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சி கொண்டே ஆண் பின் தொடர வேண்டும் என்பதாய் அப்பட்டமாய் சொன்னது மிக சிறப்பு

சிரிப்பை அடக்க முடியவில்லை, அழகிய கற்பனை

உலகின்  அழகின் பிரதேசம் என்று அந்த பெண்ணின் முகத்துக்கு கூட்டி சென்றதென்றால் அவள் எவ்வளவு அழகாக இருந்திருப்பால், எறும்பு கூட அழகிய பெண்களை சைட் அடிக்கும் போல‌

இது போன்ற மெல்லிய பிரதேசத்தில் நடந்ததில்லை என்று பெண் எறும்பு சொன்ன விதத்தில் பெண்ணுடலின் மென்மையை வசீகரத்தை சொன்னது அழகு

அழகிய பெண்க்களுக்கும் இன்னும் அழகு சேர்ப்பது கன்னங்குழி அதை சொன்ன விதமும் இன்னும் அழகு

மொத்தத்தில் நல்ல கற்பனை, கவிதை

ரொம்ப நல்லா இருக்கும் லீ, தொடர்ந்து அசத்துங்க‌
Title: Re: கதை
Post by: Global Angel on September 25, 2012, 12:26:16 AM
என் மூஞ்சி மேல எறும்பு ஊர்ந்தத பார்த்ததும் இல்லமா .... அதுக்கு கவிதை வேற எழுதி இருக்கியா மச்சான் >:( ...  யாரங்கே இவனை பிடித்து ஏரம்பு கூடத்தின் நடுவே விடுங்கள் ... >:( அனைத்தும் ஆண் எறும்புகளாக இருக்கட்டும் ... >:( (எதாவது பொம்புள ஏறும்ப விட்டா இவனால அதுக்கு ஆபத்து ... ஹெஹெஹ் ;D ;D )

மச்சான் அருமையான கற்பனைடா வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுது
Title: Re: கதை
Post by: ஆதி on September 25, 2012, 12:27:55 AM
//(எதாவது பொம்புள ஏறும்ப விட்டா இவனால அதுக்கு ஆபத்து ... ஹெஹெஹ் ;D ;D )
//

ஹா ஹா ஹா
Title: Re: கதை
Post by: Anu on September 25, 2012, 07:21:42 AM
superb sri.ippadi
hahahhaha.naan sirikiradha paarthu en colleagues ennai oru mathiri paarthutu irundanga..
enaku oru doubt. enna ellam ftc la  erumbu naai nu vachi kadhai kavithai ezhudha aarambichitinga..appo ellam solradhu sari thaano. ftc la figs ku panjam nu..
paavam adhungalaavadhu sandosama love pannatum.
manasangaluku thaan niraiya thadaigal iruku.
Title: Re: கதை
Post by: Gotham on September 25, 2012, 07:29:20 AM
superb sri.ippadi
hahahhaha.naan sirikiradha paarthu en colleagues ennai oru mathiri paarthutu irundanga..
enaku oru doubt. enna ellam ftc la  erumbu naai nu vachi kadhai kavithai ezhudha aarambichitinga..appo ellam solradhu sari thaano. ftc la figs ku panjam nu..
paavam adhungalaavadhu sandosama love pannatum.
manasangaluku thaan niraiya thadaigal iruku.
ஹாஹா.. ஆனாலும் இது ஓவரு.. : )

எறும்பு நாய் வச்சு எழுதறதுல இருக்கற சுதந்திரம் மனுசங்கள வச்சு எழுதறதுல இல்லே.. ஏன்னா நாய் எறும்புக்கு தமிழ் படிக்க தெரியாது. : )
Title: Re: கதை
Post by: பவித்ரா on September 25, 2012, 01:21:49 PM
anna intha kavithai(kathai) padichitu ennaku seripu thangala anna un karpanaiku alave illna aanal alagaana karpanai chatla silenta nic erukenu paartha intha velai than nadakutha vaalthukkal lovly karpanaina
Title: Re: கதை
Post by: Dong லீ on September 27, 2012, 01:48:58 AM
எல்லாருக்கும்  நன்றி நன்றி!!!
Title: Re: கதை
Post by: Dong லீ on September 27, 2012, 07:14:43 PM
superb sri.ippadi
hahahhaha.naan sirikiradha paarthu en colleagues ennai oru mathiri paarthutu irundanga..
enaku oru doubt. enna ellam ftc la  erumbu naai nu vachi kadhai kavithai ezhudha aarambichitinga..appo ellam solradhu sari thaano. ftc la figs ku panjam nu..
paavam adhungalaavadhu sandosama love pannatum.
manasangaluku thaan niraiya thadaigal iruku.
ஹாஹா.. ஆனாலும் இது ஓவரு.. : )

எறும்பு நாய் வச்சு எழுதறதுல இருக்கற சுதந்திரம் மனுசங்கள வச்சு எழுதறதுல இல்லே.. ஏன்னா நாய் எறும்புக்கு தமிழ் படிக்க தெரியாது. : )

aana kaathal mattum pannuthu anne.. ;)
Title: Re: கதை
Post by: Gotham on September 27, 2012, 07:19:47 PM
அண்ணே தமிழ் தெரிஞ்சா தான் காதலிக்க முடியும்ன்னா மத்தவன்ல்லாம் பாவம்..  :-[
Title: Re: கதை
Post by: ஸ்ருதி on September 27, 2012, 07:45:27 PM
ஐயோ உன் கற்பனைக்கு அளவே இல்லையா.,,,நம்ப முடியவே இல்லை...

உனக்கும் கவிதை எழத தெரியுமா?? சந்தேகத்தோடு பார்தவர்களுக்கெல்லாம் சாட்டையடி

ரொம்ப  சந்தோசமா இருக்கு....வாழ்த்த வார்த்தை இல்லை  :)