தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on September 24, 2012, 03:44:58 PM
Title: நீதானே என் பொன் வசந்தம்..
Post by: ஸ்ருதி on September 24, 2012, 03:44:58 PM
ஆரவாரமிகுந்த சாலை ஆழ்ந்த சிந்தினையில் ஆட்களையெல்லாம் கடந்து அமைதியான இடம் தேடி அங்கும் இங்கும் அலைய
மின்னலாய் ஒரு முகம் என்னை கடந்து செல்ல.. எங்கோ பார்த்திருக்கிறேன் யாராக இருக்கும்?? உள் மனதில் தவிப்பு மீண்டும் ஒரு முறை காணும் நொடி வாராதோ... தவிப்போடு தனியே நடந்து செல்ல
சட்டேன்று யாரோ என் கண்களை கரம் கொண்டு மூட ஒரு கணம் பயத்தோடு யார் என்று வினவ என் முன்தோன்றி கண்ணடித்து சிரிக்க திகைப்பு என்னுள்....
பார்க்க துடித்த முகம் மிக அருகில்...யாரோ இவன்? என்ன அலைகளில் சிக்கி சிதற... சட்டேன்று நினைவுக்கு வர அட நீயா? என்னுள் வெக்கம்..
கல்லூரி முதல் நாள் அழவைத்தவன் நான் மறந்துவிட்டியா?. கோபமும் வெட்கமும் ஒரே நேரத்தில்... முதல் அன்பு முதல் காதல் முதல் நட்பு மறக்க முடியாதது தான் எப்படி மறந்தேன்??
ஓயாமல் பேசுபவள்-இன்று மௌனத்தை மொழியாக்கி அவன் பேச நான் கேட்க நீண்ட நாள் சந்திப்பு சந்தோஷமாய் தொடர எப்படி மறந்தேன் என்னுள் கேள்வி?
கல்லூரி நாளை கன பொழுதில் கண்முன் நிறுத்தினான்... எல்லோரும் நேசித்தவனை நான் மட்டும் நேசிக்க மறந்தேனோ? நேசிப்பதை மறைத்தேனோ? எப்படி மறந்தேன்? விடைதெரியா குழப்பம் என்னுள்.
எதுவாயினும் போதுமே இக்கணம்... மனதுக்கு பிடித்தவனை கண்டுவிட்டேன் மறுபடியும் யோசித்துக்கொண்டே அவன் கரம் பற்ற "அட சீ கையை விடு" அக்கா கையைத் தட்ட ஐயோ என் கனவு.... பாதியில் முடிந்ததே...
கனவில் வந்தவனே நினைவில் வந்து வாழ்வை வசந்தமாக்குவாயா?
காலையில் கண்ட கனவு பலிக்குமா?? எனக்குள் ஒரு கேள்வி மனதினுள் சிறு வேள்வி... துக்கத்தோடு தொடர போகிறேன் என் தூக்கத்தை....
Title: Re: நீதானே என் பொன் வசந்தம்..
Post by: Gotham on September 24, 2012, 03:51:07 PM
துயரில்லாமல் தொடரலாம் தூக்கத்தை கனவு முழுமையாக
கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்.!
Title: Re: நீதானே என் பொன் வசந்தம்..
Post by: ஸ்ருதி on September 24, 2012, 04:25:31 PM
ipadi niriya kanavu iruke :D athanaium mei pada vaipu irukuma:D
Title: Re: நீதானே என் பொன் வசந்தம்..
Post by: ஆதி on September 24, 2012, 04:37:04 PM
பெரும்பாலும் இது போன்ற கவிதைகளில் படக்கென ஒரு தொய்வு உண்டாகும், இந்த கவிதை அப்படியல்ல, அது சிறப்பு
கனவின் இன்னொரு புதிரையை அழகாய் சொல்லியிருக்குறீர்கள், ஒரு முகம் நமக்கு தெரிந்த மாதிரியே இருக்கும் யாரென ஊகிக்க முடியாது, சட்டென அது நமக்கு நன்கு தெரிந்தவர் போல இருக்கும், ஆனால் கனவை முன்னோக்கி நகர்த்தி பார்த்தால் முன்பு நமக்கு தெரிந்த முகமும் அதுவும் ஒன்றில்லை என்பது புலப்படும்
இது போன்ற கனவுகள் ஒரு விதத்தில் மிக சுகமானவை, நான் இழந்ததை எல்லாம் அப்படியே திரும்ப தந்துவிடும், அந்த நாள் முழுக்க அந்த போதையிலும் மகிழ்ச்சியிலும் இருக்க வைக்கும்
கொஞ்சம் ஆழமாய் யோசித்தால் இது போன்ற கனவுகள் நம் மூலை நம் மனத்தின் காயங்களுக்கு களிம்பு தடவ செய்யும் ஏற்பாடு, அதற்சமய வலி நிவாரணி, ஆறுதல், சோகத்த்லேயே அலையும் மனதை துள்ளல் கொள்ள செய்யும் 420 வேலை
என்னை பொருத்தமட்டில் இந்த கவிதையில் ஒரு சிறுகதைக்கான உபபிரதி() இருக்கிறது, அதனை கொண்டு கதையை எழுதலாம் நீங்கள் மிக சுவாரஸ்யமாக கொண்டு போயிருக்க முடியும்
வாழ்த்துக்கள்
Title: Re: நீதானே என் பொன் வசந்தம்..
Post by: ஸ்ருதி on September 24, 2012, 05:06:53 PM
நன்றிகள் ஆதி,,
அ வரிசையில் எழத தான் நினைத்தேன் ...வேண்டாம் என்று பாதியில் நிறுத்தி விட்டேன் ..
இது ஒரு சிறுகதை போல தான்,,,,, :D தொடர்ந்தால் கதையாக மாற்றிவிடலாம்....
பின்னூட்டத்திற்கு நன்றிகள்
Title: Re: நீதானே என் பொன் வசந்தம்..
Post by: Anu on September 25, 2012, 07:26:29 AM
arumaiyaana kavithai cuty. kanavu kaanungal nu abdul kalaame solli irukar. so kandippa palikkkum. vaazthukkal :)
Title: Re: நீதானே என் பொன் வசந்தம்..
Post by: பவித்ரா on September 25, 2012, 01:38:32 PM
ஸ்ருதி அழகான சுகமான கனவு அது நிஜமாக வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுது ஸ்ருதி :-* :-* :-*
Title: Re: நீதானே என் பொன் வசந்தம்..
Post by: ஸ்ருதி on September 25, 2012, 05:11:04 PM
thanks pavi ma
Title: Re: நீதானே என் பொன் வசந்தம்..
Post by: Thavi on September 25, 2012, 10:24:57 PM
Title: Re: நீதானே என் பொன் வசந்தம்..
Post by: PiNkY on April 15, 2013, 01:45:09 PM
ஸ்ருதி வூவ்.. எவ்வளவு அழாகான கனவு ..! எனக்கு இப்படி ஒரு கனவு வராதா.? :P என ஏங்க வெச்சுடீங்க.. ரொம்ப அழகான கதை.. தாங்கள் கதை புயலாக மாற என் வாழ்த்துக்கள்.. ;D