FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dong லீ on September 24, 2012, 01:47:53 PM

Title: கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டகாசம்
Post by: Dong லீ on September 24, 2012, 01:47:53 PM
கவிதை எழுதுவது எப்படி

கவிதைகளை வாசித்து பழக்கம் இல்லை
கவிதை நயம் எப்படி இருக்கும்
என்று சிறு புரிதல் கூட இல்லை
அனால் கவிதை எழுதும் எண்ணம் ஏனோ
என்னுள் முளைக்க
கவிதை வெறி மட்டும் இருந்தது
ஆனால் கவிதை எழுதுவது எப்படி ?
காகிதமும் கையுமாக
என் கற்பனை குதிரையை தட்டி விட்டேன்
குதிரையோ குப்புற படுத்து
குறட்டை விடாத குறை தான்

அப்போது ஒரு எண்ணம் மின்னலாய்
மனதில் தோன்றியது
கவிதைகளுக்கு பெரும்பாலும்
உபயோகிக்கப்படும் வார்த்தைகளை
வைத்து 
ஒரு பெண்ணின் அழகுடன்
ஒப்பிட்டு
திரைப்பட கவிதைகளை
உதவிக்கு கொண்டு
எழுத தொடங்கினேன்

சில சான்றுகள் இங்கே

மழை

மழை துளிகளுக்கு நடுவே
அவள் முகத்தை கண்டேன்
அதனால் மழை துளிகளும்
அழகாய் தோன்றியது

காற்று

உலகை சுற்றி இருக்கும் காற்று
முழுவதும் அவள் மூச்சாக
மாறி விட  துடிப்பதால் தான்
புயல் உருவாகிறது

நிலவு

அனைவரும் அவளை மட்டும் ரசிப்பதால்
கோபம் கொண்ட  நிலவு
தூரமாய் சென்று விட்டது 

நிலம்

நிலம் கூட நடுங்கி விடுகிறது சில சமயங்களில்
அவள் நிழல் நிலத்தில் சாய்வதால்
Title: Re: கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டகாசம்
Post by: Gotham on September 24, 2012, 01:57:15 PM
அட்டகாசம்  ஸ்ரீ

அங்கங்க பட்டி பார்த்து டிங்கரிங் செய்தால் சூப்பர் கவிதையாயிடும். நிலவும் நிலமும் நல்ல ரசனை.


இறுதியாக,

எப்படி ஸ்ரீ உன்னால மட்டும் முடியுது?
Title: Re: கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டகாசம்
Post by: Global Angel on September 24, 2012, 02:18:37 PM
அனைவரும் அவளை மட்டும் ரசிப்பதால்
கோபம் கொண்ட  நிலவு
தூரமாய் சென்று விட்டது


மச்சான் கலக்குறே ... இந்த கவிதையின் தலைப்பு அமாவசை என்றிருந்தால் நன்றாய் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது .... கற்பனை அருமை மச்சான்
Title: Re: கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டகாசம்
Post by: ஆதி on September 24, 2012, 02:31:00 PM
கவிதை நன்று ஸ்ரீ

//என் கற்பனை குதிரையை தட்டி விட்டேன்
குதிரையோ குப்புற படுத்து
குறட்டை விடாத குறை தான்
//

யோசித்து யோசித்து சிரித்தேன்

ஒருவிடயம் மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்

கற்பனை குதிரை கவிஞன் சவாரி செய்ய வேண்டும் இல்லையா ? அதனை ஓடமட்டும்விட்டால் காடுமேடு என்று ஓடும், சில நேரம் சாஸ்டாங்கமாக படுத்துக் கொள்ளும், செந்த உசுப்பலுக்கும் அசைந்து கொடுக்காது

த‌மிழ் இறைகையிலேயே க‌விதையின் மொழி, ஆதி த‌மிழ‌ர்க‌ளிட‌ம் பேசுச்சு மொழி இல்லை, பாட்டு மொழி தான் இருந்த‌து

எட‌க்கும் ம‌ட‌க்கும், ச‌ம்ப‌ள‌ம் கிம்ப‌ள‌ம், ச‌ண்ட‌ ச‌ச்ச‌ர‌வு, குண்டும் குழியும், இது போன்ற‌ இர‌ட்டை வார்த்தை பய‌ன்பாடுக‌ள் த‌மிழில் அதிக‌ம்

த‌மிழ் தெய்வீக‌ மொழி என்று ஏன் சொல்கிறார்க‌ள், இலக்கணத்திலேயே ஆன்மீக‌த்தை போதித்த மொழி தமிழ் மொழி

உயிர் + மெய் = உயிர்மெய்

மெய் என்பது உடலை குறிக்கும் இல்லையா



பிற எந்த மொழியை எடுத்துக் கொள்ளுங்கள், நான் என்பதும் உடல் என்பதும் ஒன்று என்பது போன்றே, வாக்கியங்கள் அமைக்கப்படும்

ஆங்கிலத்தில்

I am not keeping well என்போம்


தமிழில்

மேலுக்கு சரியில்லை, உடம்பு சுகமில்லை, உடம்புக்கு சரியில்லை என்று சொல்வோம் இல்லையா

நான் என்பது உடல் என்பது வேறு என்பதை நாம் இயற்கையிலேயே புரிந்து கொண்டிருந்தோம்

//காற்று

உலகை சுற்றி இருக்கும் காற்று
முழுவதும் அவள் மூச்சாக
மாறி விட  துடிப்பதால் தான்
புயல் உருவாகிறது

நிலவு

அனைவரும் அவளை மட்டும் ரசிப்பதால்
கோபம் கொண்ட  நிலவு
தூரமாய் சென்று விட்டது 
//

இந்த இரு கவிதைகளை மிக ரசித்தேன், கொஞ்சம் தட்டினால் மிக அற்புதமான கவிதையாக வரும்
Title: Re: கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டகாசம்
Post by: ஸ்ருதி on September 24, 2012, 03:34:08 PM
ஸ்ரீ நம்ப முடியல
நிஜமா சூப்பர்...
உன்னிட்ட இருந்து
நிறைய கத்துக்கணும் போல இருக்கே  ;) ;) ;)


அனைவரும் அவளை மட்டும் ரசிப்பதால்
கோபம் கொண்ட  நிலவு
தூரமாய் சென்று விட்டது  <<<<<<<<<< awesome
Title: Re: கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டகாசம்
Post by: aasaiajiith on September 24, 2012, 07:30:13 PM
கவிதை எனும் பெயரில்  கடித்து குதறிடுபவர் மத்தியில்
லேசான உதறலோடு  ஒன்றன்பின் ஒன்றாய் வந்தாலும்
மழலையின் உளறலை போல் மிக மிக அழகாய்  வந்திருக்கு கவிதை !

வாழ்த்துக்கள் !!
தொடர்ந்து பதிக்கவும் !
Title: Re: கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டகாசம்
Post by: Dong லீ on September 24, 2012, 07:34:52 PM
எல்லாருக்கும் நன்றிகள்

நல்ல கவிதை திறமை உள்ளவங்க அப்படின்னு நான் நினைக்கிற எல்லாரும் உங்க கருத்தை சொல்லி இருக்கீங்க
ரொம்ப மகிழ்ச்சி..

ஆனால் என்ன எல்லாரும் கருப்பு நிறத்திலேயே பதிவை போடிருகீங்க
Title: Re: கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டகாசம்
Post by: aasaiajiith on September 24, 2012, 07:36:52 PM
andha kuraiyai dhaan naaan theeerthutteiney sri .... ;)
Title: Re: கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டகாசம்
Post by: Gotham on September 24, 2012, 07:39:54 PM
ithu oru kuraiyaa sri :)

karutha sonna pothaathaa color colora sollanuma ? solitaa pochu
Title: Re: கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டகாசம்
Post by: Global Angel on September 25, 2012, 12:33:02 AM
மச்சான் நாங்கல்லாம் கருப்பில எழுதினாலும் விருப்புல எழுதி இருக்கோம்டா ... இரத்தத்தால எழுதினாதான் பாசமாடா ... உன் மச்சாள் , அண்ணன் மார் எல்லாம் உங்கிட்ட பாசமா  இருக்கோம்ல ... கருப்புதான் நமக்கு புடிச்ச கலரு ..  3 தேவி நீயும்தான் கருபில போட்ருக்க .. அப்போ நாமெல்லாம் ஒரு இனம் ...நம்ம இனம்னு சந்தோச படு கலரு முக்கியமில்ல .. சொல்றவங்க மனசு தான் முக்கியம் ..
Title: Re: கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டகாசம்
Post by: Anu on September 25, 2012, 06:43:27 AM
கவிதை எழுதுவது எப்படி

கவிதைகளை வாசித்து பழக்கம் இல்லை
கவிதை நயம் எப்படி இருக்கும்
என்று சிறு புரிதல் கூட இல்லை
அனால் கவிதை எழுதும் எண்ணம் ஏனோ
என்னுள் முளைக்க
கவிதை வெறி மட்டும் இருந்தது
ஆனால் கவிதை எழுதுவது எப்படி ?
காகிதமும் கையுமாக

என் கற்பனை குதிரையை தட்டி விட்டேன்
குதிரையோ குப்புற படுத்து
குறட்டை விடாத குறை தான்

haha . superb sri.
enakum indha nilai thaan ..
boys ku gal nenacha kavithai varuthu.
gals ku payana nenacha kavithai varum.

நிலவு

அனைவரும் அவளை மட்டும் ரசிப்பதால்
கோபம் கொண்ட  நிலவு
தூரமாய் சென்று விட்டது 

நிலம்

நிலம் கூட நடுங்கி விடுகிறது சில சமயங்களில்
அவள் நிழல் நிலத்தில் சாய்வதால்
arumaiyaana oppeedu.
nice kavithai sri..
Title: Re: கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டகாசம்
Post by: பவித்ரா on September 25, 2012, 01:28:49 PM
nalla than oduthu anna un karpanai kuthirai en kita kuthiraiye illana thodarnthu elunthungal alaga elutharenga vithiyaasama eruku ennaku ellam kuda puriyuthu athu pola arumaiya elutharinga nice anna
Title: Re: கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டகாசம்
Post by: Thavi on September 25, 2012, 10:17:21 PM
மழை

மழை துளிகளுக்கு நடுவே
அவள் முகத்தை கண்டேன்
அதனால் மழை துளிகளும்
அழகாய் தோன்றியது

காற்று

உலகை சுற்றி இருக்கும் காற்று
முழுவதும் அவள் மூச்சாக
மாறி விட  துடிப்பதால் தான்
புயல் உருவாகிறது

நிலவு

அனைவரும் அவளை மட்டும் ரசிப்பதால்
கோபம் கொண்ட  நிலவு
தூரமாய் சென்று விட்டது 

நிலம்

நிலம் கூட நடுங்கி விடுகிறது சில சமயங்களில்
அவள் நிழல் நிலத்தில் சாய்வதால்

lee machi unga kavithaiku naan adimai remba alaga eluthiringa  :-*

நீர்,நிலம் ,கற்று
இல்லாமல்  ஒரு  நாள் 
வாழ்த்திடுவேன் -என்னவள்
நீ இல்லை என்றால்
 ஒரு நொடியில் உயிர் விடுவேன்  :'( :'( :'( :'(