FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 23, 2012, 10:07:52 PM

Title: ~ நெஞ்சு எரிச்சல் பற்றிய தகவல் !!!! ~
Post by: MysteRy on September 23, 2012, 10:07:52 PM
நெஞ்சு எரிச்சல் பற்றிய தகவல் !!!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-e.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2Fs720x720%2F229220_288114124627428_1234827343_n.jpg&hash=b53d6f16c73b6bd34086ec7f6d52beae96e64f25) (http://www.friendstamilchat.com)


நெஞ்சு எரிச்சல் நம்மில் பல பேருக்கு இருக்கின்ற ஒரு பிரச்சன்னையாகவே இருக்கிறது . நெஞ்சு எரிச்சல் வரும் நேரத்தில் மருத்துவரின் அறிஉரை இல்லாமல் மாத்திரை டானிக் சாப்பிடுவதை முற்றியும் தவிருங்கள் .அப்படி நீங்கள் சாப்பிட்டு வந்தால் அது ஆபத்தில் போய் தான் முடியும் .மருத்துவரின் அணுகி அவரின் ஆலோசனை படி கேட்டு மாத்திரை சாப்பிட்டால் இந்த தொல்லை இருக்கவே இருக்காது

நெஞ்சு எரிச்சலுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது GERD. இதனுடைய விரிவாக்கம் GASTRO ESOPHAGEAL REFLUX DISEASE.

நம்முடைய உணவுக்குழாய் என்பது வாயிலிருந்து வயிற்றுக்கு உணவை எடுத்துச் செல்லும் ஒரு டியூப். இரைப்பைக்குச் சென்ற உணவு திரும்ப மேலே வராமல் இருப்பதைத் தடுப்பதறகு வால்வ் இருக்கிறது. இந்த வால்வினுடைய பெயர் LES. இந்த வால்விற்கு ஏதேனும் பிரச்சனை இருக்கும்போது தேவை இல்லாமல் திறந்து கொள்கிறது. இதனால் வயிற்றிலிருக்கும் உணவு, அமிலத்துடன் சேர்ந்து மேல்நோக்கி உணவுக்குழாய் பகுதிக்கு வந்து விடுகிறது. இதனால் தேவையற்ற நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.

அடிக்கடி நெஞ்சு எரிச்சல், நடுமார்பில் ஏற்படுவது அல்லது மார்பு எலும்புக்கு கீழே ஏற்படுதல் அல்லது நடுவயிற்றில் உணரப் படுதல் சிலருக்கு வரட்டு இருமல் அல்லது ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.

சிலருக்கு ஹையாட்டஸ் ஹெர்னியா என்ற பிரச்சனை இருக்கலாம்

குண்டாக இருப்பவர்களுக்கு இப்பிரச்சனை எளிதில் வருகிறது

புகை பிடிப்பவர்களுக்கு இப்பிரச்சனை வரலாம்

பேறு காலங்களில் இப்பிரச்சனை ஏற்படலாம்.

நாம் சாப்பிடுகின்ற சில உணவுகளில் சிட்ரஸ் பழங்கள், சாக்லெட், காபி, கொழுப்புச் சத்துள்ள உணவுகள், பூண்டு, வெங்காயம். மசாலா உணவுகள் ஆகியவை முக்கிய காரணங்கள்.

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த நோய் அதிகம் ஏற்படுகிறது.லேசான தொல்லை இருப்பவர்களுக்கு வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்தாலே போதுமானது. எடை குறைப்பது, புகை பிடிப்பதை நிறுத்துவது. குடிப்பதை நிறுத்துவது. மசாலா போன்ற உணவுகளைத் தவிர்ப்பது, அடிக்கடி உணவுகளை பிரித்து உண்பது, சாப்பிட்டவுடன் இரண்டு மணி நேரத்திற்குத் தூங்காமல் இருப்பது, தூங்கும் போது தலைக்கு இரண்டு தலையணை வைத்து தலைப் பாகத்தை உயர்த்திப் படுத்தால் போதுமானது.

அமில தொல்லை இருப்ப வர்களுக்கு அதை குறைப்பதற்கு மருத்துவம், அந்த வால்வினுடைய வலிமையைக் கூட்டு வதற்கான மருந்தும் கொடுக்கப் படுகிறது, இதன் பிறகும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருந்தால் எண்டோஸ்கோபி பரிசோதனையும்,
தேவைப்பட்டால் அறுவை சிகிச்சையும் செய்யப்படும்.