FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: viswa on September 23, 2012, 09:17:28 PM

Title: வேண்டுதல் முத்தம்
Post by: viswa on September 23, 2012, 09:17:28 PM
நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும்
நிம்மதி வாழ்வு வாழ வேண்டும்
உலகம் இவனை மட்டும் பார்க்க வேண்டும்
என்று எல்லாம் வேண்டி
கடவுளை பார்த்து தந்தான்
"வேண்டுதல் முத்தம்" :)
Title: Re: வேண்டுதல் முத்தம்
Post by: Gotham on September 24, 2012, 10:48:56 AM
கடவுளுக்கே முத்தமா.


அது சரி!
Title: Re: வேண்டுதல் முத்தம்
Post by: Global Angel on September 24, 2012, 12:12:43 PM
ஏன் கோதம் கடவுளுக்கு முத்தம் கொடுக்க கூடாதா என்ன ? ... நம்மாளுங்க ஐஸ் வைகுரதுல கில்லாடிங்க ..கடவுளாலேயே தப்ப முடியல பாருங்க ... ஹஹா   விஸ்வா நன்று
Title: Re: வேண்டுதல் முத்தம்
Post by: Gotham on September 24, 2012, 12:19:50 PM
அது சரி..! நல்லாருக்கட்டும். : )


கடவுளையே படைத்தவர் தானே நாம் :)
Title: Re: வேண்டுதல் முத்தம்
Post by: ஆதி on September 24, 2012, 12:22:35 PM
முத்தம் என்பது மிகுதியான அன்பை வெளிப்படுத்து அடையாளம், உச்சி மோத்தல் என்பது தாயோ, தந்தையோ, சகோதரரோ, பெரியவரோ செய்வது, காதலன் காதலிக்கும் சில நேரம்

கடவுளுக்கு வழங்கப்படும் முத்தம் அன்பின் அடையாளம் என்றாலும், அது காலடிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது

கால்களுக்கு வழங்கும் முத்தம் என்பது அடிமைகளால் எஜமானர்களுக்கு வழங்கப்படும் முத்தங்கள், காதலியின் கால்களில் காதலன் வழங்கும் முத்தமும் இதே அடையாளைத்தை கொண்டதுதான், கடவுக்கு வழங்கப்படும் முத்தமும் அன்பின் அன்பால் அவனுக்கு அடிமையானதை குறிக்கும் குறியீடு

ஆனால் பிராத்தனையில் அன்பின் மிகை இல்லை விஸ்வா, அதனால் இந்த முத்தம் அன்பின் மிகையை குறிக்க வில்லை, அடுத்தடுத்த கவிதைகளில் இதனை கவனித்து கையாளுங்கள்

வாழ்த்துகள் விஸ்வா
Title: Re: வேண்டுதல் முத்தம்
Post by: aasaiajiith on September 24, 2012, 01:17:48 PM
வாழ்த்துக்கள் விஸ்வா !

கோதம் கருத்தை வழிமொழிகின்றேன் !!

கொடுப்பது என தீர்மானித்த பிறகு கடவுள் என்ன ?
பக்தை என்ன ? பக்தன்  என்ன? ,பித்தன் என்ன ??
நடக்கட்டும் நடக்கட்டும் !