FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 23, 2012, 07:01:54 PM

Title: உயிர் சிலையே !
Post by: aasaiajiith on September 23, 2012, 07:01:54 PM
உயிர் சிலையே !
உன்னை உற்று நோக்கினால்  ,
ஓராயிரம் கவிதைக்கான கரு கிடைத்துவிடும்
அவ்வாயிர கவிக்கருவிர்க்கென உற்று நோக்கி
என் ஒற்றை திருவுருவை , உரு தெரியாதபடி
சிதைத்துக்கொள்ள சத்தியமாய் சித்தமில்லையடி
கறந்த பால் சுத்தமே,
உள்ளூர காண எண்ணமுமில்லை
ஒருமுறை , ஒரே முறை  வெறும் மேலோட்டமாய்
கண்டுக்கொள்கிறேன் (கவிதைக்காக )
கண்டுகொள்ளாதே !
கண்டவுடன், உன்னை கண்டவுடன் , கருத்தினில்
தமிழின தலைவனின் வரி ஒன்றே எதிர் நின்றது ....
"கருப்பு பெண்கள் சிரிக்கும் போதுதான், கவின்
முத்துபர்களுக்கு முதன்மை இடம் கிடைக்கின்றது "

இப்போதைக்கு இத்துடன்  நிறுத்திகொள்கிறேன்
என் கற்பனை குதிரைகள் கட்டுப்பாடில்லாமல்
கழன்று சுழல்வதால் .......
Title: Re: உயிர் சிலையே !
Post by: supernatural on October 14, 2012, 08:45:34 PM
தமிழின தலைவனின் வரி ஒன்றே எதிர் நின்றது ....
"கருப்பு பெண்கள் சிரிக்கும் போதுதான், கவின்
முத்துபர்களுக்கு முதன்மை இடம் கிடைக்கின்றது "

nalla varigal..azagu kavithai ..
Title: Re: உயிர் சிலையே !
Post by: aasaiajiith on October 15, 2012, 01:26:36 PM
VaazTHthirkku Nandrii !!!