FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 16, 2011, 08:58:34 PM
-
இதயத் துடிப்பின் பட்டம்
காதல்...
காதலை ஆட்கொண்டேன்
புவியின் அரசானேன்...
பறக்கத் தெரிந்தும்
பறக்க முடியாத பறவை ஆனேன்
காதல் படுத்தும் பாடு
காதலர்களுக்கு சுகமானது...
மேகம் போடும் தூரிகையில்
தென்றலே...நீ வீச,
நீ பாடும் தாலாட்டு
உன் சித்திரத்தை வரைய,
ஓசையின்றி கேட்டேன்
உன் வளை ஓசை...
ஆசையுடன் கேட்டாய்
என் இதயத்தின் ஓசை...
-
nice .... ;)