FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 23, 2012, 12:44:25 PM

Title: ஒரு துளி கடல்
Post by: ஆதி on September 23, 2012, 12:44:25 PM
ஒருதுளி கடல்போல வழிகின்ற
உன்கண்ணீர் எதற்காக ?; இதயத்து
பெருவீட்டில் குடிவைத்த உறவை
பிரிவு புணர்ந்ததற் காகவோ ?
சிறுபூம் பாதத்து கொலுசும்
சிந்துகிற ஒலியில் உன்குமுறல்
இருந்து நெஞ்சத்தைப் பிளக்கிறது
என்ஆணி வேரைப் பேர்க்கிறது..

ஒல்லியஉரு கறுப்புத் தான்நான்
ஊதுபத்திப் போலநறு மணப்பது
தெள்ளியஉன் நினைவைதான்; இவ்விதியா
திரித்துவிடும் நம்புரிதலைக் ; கையில்
அள்ளியநீராய் ஒழுகியா தீரும்நம்
அன்பு ?; ஆதாமே பிறக்க
வில்லை என்றாலும் நம்பு,என்
எலும்பால்தான் படைக்கப் பட்டவள்நீ!
Title: Re: ஒரு துளி கடல்
Post by: Global Angel on September 23, 2012, 01:31:17 PM
இனிய மனதை உருக்கும் காதல் கவிதை ... ஒரு சந்தேகம் உங்க எழும்பால பொறந்தவன உங்களுக்கு மகளாய் தானே இருக்க முடியும் அப்புறம் எப்டி இது காதல் கவிதை ஆகும் .... பாச கவிதையோ
Title: Re: ஒரு துளி கடல்
Post by: ஆதி on September 23, 2012, 01:38:31 PM
ஆதாம் ஏவாள் கதை படிச்சதில்லையா ?

ஏவாள் ஆதாமின் எலும்பால் படைக்கப்பட்டவள்

அதை குறியீடாக வைத்து சொன்னேன்
Title: Re: ஒரு துளி கடல்
Post by: Global Angel on September 23, 2012, 01:49:04 PM

ஒத் அப்டியா .. அப்போ இந்த கவிதை காதல் கவிதைதான் ... அழகான வரிகள் .. அவள் கண்ணீரை போருக்க முடியாத காதலரா நீங்கள் ... ஹ்ம்ம்
Title: Re: ஒரு துளி கடல்
Post by: ஆதி on September 23, 2012, 01:59:31 PM
கடல், யாராலும் அறிய முடியாத மர்மங்களை உள்ளடக்கியது. பெரும்பாலான நேரங்களில் அமைதியாகவும், சில நேரங்களில் கொந்தளிப்பாகவும் என பன்முகங்களைக் கொண்டது இல்லையா, அதனால் தான் கண்ணீர் துளிக்கு கடலை படிமம் ஆக்கினேன்


இப்போ அந்த அழுகையின் பின் ஆயிரம் காரணம் இருக்கலாம் இல்லையா, வாசிப்பவர் அந்த மறை காரணங்களை ஊகிச்சுக்கு வேண்டியதுதான்