FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 22, 2012, 07:12:16 PM
-
சிற்றுலாவாய் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கும்
தேன்சுவை நிறைந்த வேற்பலாவே !
பலகட்டமாய் திட்டமிட்டுதான் சுற்றுலாவை
திட்டமிட்டிருப்பீர் நீங்கள், தேன்நிலாவே !
உனக்கு இ(ஷ்)ட்டம் என்பதாலே . ஒத்துபோனேன்
எனக்குள் க(ஷ்)ட்டம் இருந்தும், உன் சுற்றுலாவை
இனியவளே ! இக்கட்டில் நீ சிக்கிக்கொல்வதில்
துளியுமெனக்கு இ(ஷ்)ட்டமில்லை திட்டவட்டமாய்
ஆக, இதோ என் கருத்தை சொல்கிறேன் அதை'
கேட்பதும்,கேட்காததும் உன் இ(ஷ்)ட்டம் .
உயிரே !
உதகைக்கு நீ செல்வதானால் ,உத்தேசித்துகொள்
உதகையின் ஒட்டுமொத்த பூக்களும் ஒன்றுதிரண்டு
உனக்கெதிராய், உயிர் போகும்வரை
உண்ணாவிரதம் இருக்ககூடும் ஒற்றுமையாய்
உன் வரவை உறுதியாய் தடுப்பதற்க்கு.
எம்பெருமானின் ஊருக்கு நீ செல்வதானால்
எப்படியும் வழக்கு வந்துசேரும் நிச்சயமாய்
எம் மகாபிரசாதம் லட்டின்(லட்டு ) மவுசினை குறைக்க
எங்கிருந்தோ வந்தாய் என , தேவஸ்தானம் தரப்பில் .
அங்கிருந்து ஹைதராபாத் நீ செல்வதானால்
அவ்வப்போது ஆங்காங்கே தெலுங்கானா விற்கான
அலைமோதும் கூட்டமது, உனைக்காண திரும்பிவிட்டால்
அப்புறம் சந்திர சேகர ராவின் கண்டனத்தை பெறக்கூடும், யோசித்துக்கொள் !