FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 22, 2012, 07:07:24 PM
-
எண்ணம்கொண்டேன் பதிப்பிடுவோம் என்று
எழுதிட அமர்ந்தேன் அதிகாலையில் இன்று
எழுதுகோல் பிடித்ததும் ஏதேதோ
எண்ணங்கள் தோன்றிடும் ஒன்றிரண்டு
என்னானதோ ஏதானதோ தெரியவில்லை
என் கற்பனைக்குதிரைகள் கண்திறக்கவில்லை
எத்தனைக்காலம் கடுந்தூரம் ஓடினாலும்
எப்போதேனும் கலைப்படைந்திருக்கின்றதே தவிர
எப்போதும் கண்திறக்க மறுத்ததில்லை
என் வழக்கமும் சுதந்திர சிந்தனையாதலால்
எப்போதும் கடிவாளமிட்டதில்லை அவைகளுக்கு
எதோ, ஏதேதோ என புலம்புவதை காட்டிலும்
எப்படியோ கனிவாய் குதிரைகளிடமே குறைகேட்டுவிட்டேன்
எட்டி கண்ணைத்திறந்து கண்ணீர் வடித்தப்பின்
என்னிடம் சொன்னது கண்திறவா காரணத்தை
என்னவள் அவள் என்னை விடுத்து சுற்றுலாவிர்க்கென
எங்கோ செல்வதால் தான் இந்த கண்திறவாமை
எனும் ஒத்துழையாமையாம்
என் செய்வேன் நான் ஏது செய்வேன் ?????
-
nalla varigal..karpanaikey thadaiya??