FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: !! AnbaY !! on September 22, 2012, 01:59:23 PM

Title: கனவு உலகம்
Post by: !! AnbaY !! on September 22, 2012, 01:59:23 PM
நானும் நீயும்
மட்டுமே இருக்க
உலகம் ஒன்று
வேண்டினேன்
இறைவனிடம்

நம் உலக்த்தில்..
கருமை இல்லை
வண்ணம் மட்டுமே
குயில்களின் இசையில்
இனிமை மட்டுமே

புல்லினங்கள் உண்டு
புலியினங்கள் இல்லை
பூ இங்கே மலரும்
வாடுவதில்லை
வண்டுகள் உண்டு
தேனைக் குடித்தும்
ஓடிவிடுவதில்லை

மலர்கள் உண்டு
இசை உண்டு
இனிமை உண்டு
சந்தோசம் உண்டு
எல்லாம் உண்டு
உன்னைத் தவிர...

எல்லாம் இருக்க
வேண்டினேன்
நீ இருப்பாய் என
நம்பி கேட்க
மறந்தேன் நீயும்
என்னோடு வர
மறுத்துவிட்டாய்....

நீ இல்லாத இந்த
உலகம் இருந்து
என்ன லாபம்
அது கனவு
உலகமாகவே
இருக்கட்டும்!!