FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on September 21, 2012, 01:36:27 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdn3.tamilnanbargal.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fimagecache%2Ftn%2Fimages%2Fkavithai%2Fimages_71.jpg&hash=92892997ee757d5ee0582ffcf07b8c6e44c0f676)
ஹிம்சை வழியினை எதிர்த்து வென்று
அஹிம்சை வழியினில் பெற்ற சுதந்திரம்
அகிலம் காணாத அறவழி சுதந்திரம்
அகன்றப் பாரத சுதந்திரம்!
ரத்தக் குழம்பு எண்ணெய் வார்த்து
சுத்தக் கதர்த்திரி கருகி ஒளிர
ஏத்தியத் தீபமே இந்திய சுதந்திரம்
சித்தியத் தியாகத் தீபமே!
இரவில் வாங்கியதால் விடிவே இல்லைஎன்றக்
குரலில் பொங்கிய ஏக்கம் நிரந்தரமோ?
அரவின் வாயிலிலே அகப்பட்டத் தேரையே
அறிவில் மாந்தர் சுதந்திரமே!
போராடியத் தலைமுறை காடேகி விட்டதால்
பேயாடும் கொள்ளையர் வாழவோ சுதந்திரம்?
ஊரோடும் உறவோடும் இணைந்து ஏய்க்கும்
நாரோடு மலர்மணம் போலவே!
அயலான் அடிமையினை நீக்கிட அண்ணல்
செயலில் அகிம்சை! சொந்த இந்தியனின்
செயலின் தளையினை நீக்கிட எண்ணல்
செயல் செய்திடல் நன்றே!
சனநாயக அளவில் பெரியதொரு மாற்றமே
குணமாக்கும் சுதந்திர சுந்தரத் தீபத்தை!
பணநாயக கொள்ளையில் அள்ளி மூழ்குபவரை
பிணையாக்கி அணைபோட்டு பிணமாக்குவீரே!
பாரதப் புதல்வர்களே! முளையிடும் மீசைகளே!
பாரதியின் புதுமைப் பெண்களே! விளைநிலமிதில்
வீரத்தின் விவேகத்தின் வேகத்தைக் கொண்டே
உதிரத்தில் உடலில் உறுதிகொள்ளே!