FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 20, 2012, 07:54:16 PM
-
தென்னை நிழல் விழும்
உன் முற்றத்தை
நீ கூட்டும்
அழகே தனி.
அந்த நளினத்தில்
கரைய
நானும்
என் காதலும்
பார்வை
தவமிருப்போம் தினம்.
ஈர குழல் முடிந்து
நீல தாவணியில்
நீ வந்து...
தரை கூட்டி
தெள்ளிய தண்ணீர் தெளித்து
வெள்ளிய கோலம் இடுகையில்
நீர்வார் நெற்றியை
உன் புறங்கையால் துடைப்பாய்..
அப்பொழுது
என்னை வெளியேறி ஒருவன்
உலக காற்றை
குளிர்த்தும் விசிறியும்..
மொத்த வெயிலையும்
மறைக்கும் குடையும்..
உனக்கு கொணர்வான்..
நேற்று வெயில் விழும்
முற்றத்தை கூட்டி
வியர்வை கசகசக்க திரும்பினாய்
என் மனைவியாய்...
அப்போது
என்னை வெளியேறிய ஒருவன்
தடித்த குரலில் கேட்டான்
"காஃபி எங்கேடி"
-
நேற்று வெயில் விழும்
முற்றத்தை கூட்டி திரும்பினாய்
என் மனைவியாய்...
ஒருத்தனும் வெளிவரவில்லை
உனக்கு விசுறவும்..
ஒரு டம்ளர் தண்ணீர் தரவும்..
;D ;D ;D ;D ;D ;D ;D ;D ;D
அடங்க .. கொக்கா மக்கா ... படுபாவி பசங்கள ....இது எல்லாம் ஓவராய ...... போண்டடின எவனும் குடி பிடிக்க மாடன் போல ..... அப்போ கல்யாணமே பணமா இருந்துகனும் நாம எல்லாம் ..... ஆனா எனக்கு ஒரு சந்தேகம் அப்போதும் ஒருவன் வெளிவரவேண்டுமே ... காப்பி என்கேடின்னு கேட்டுகிட்டு ....
-
:D :D :D
ஹா ஹா ஹா
நீங்க சொல்லும் முடிவு இன்னும் அழுத்தமானது
கவிதையின் முடிவை அப்படி மாற்றிவிடுகிறேன் :)
கல்யாணத்துக்கு பின் பொய்யாகி போகிற காதலை பதிவு செய்யவும், ஆணினத்தின் குண மற்றங்களை பதிவு செய்யவும் எழுதினேன்
நீங்கள் சொல்லும் முடிவு செவிட்டில் அடிக்கிற மாதிரி இருக்கும்
அப்படியே மாற்றிவிடுகிறேன், நன்றிங்க
-
காப்பி முடிவு இன்னும் அசத்தல்.
-
ஆமாம் கோதம், வாசிக்கும் போதே சுருக்கென்று இருந்தது, மாற்றிவிட்டேன்
-
ஹஹஹா ... எத்தின படம் பார்த்துட்டோம் ... இத கூட சொல்ல மாடமா ... ஹிஹ்ஹெஈ .... ம்ம் அழுத்தமான கவிதைதான் ... என் போல மனைவி
வாச்சா .... ஏன் உனக்கு கை இலையா .. பொய் சீனி இருக்கு கப்பே தூள் இருக்கு ... காய்ச்சி நா குடிச்சிட்டு வச்ச மிச்ச பால் இருக்கு கலந்து குடிசிக போ .. இப்டி சொல்லி அனுபிடிவேன் ... மிஞ்சி மிஞ்சி மொறைப்பாங்க... அப்புறம் வழிக்கு வரதனே வேணும் ...சூரியன் உதிகுற நேரம் வார இவங்க ஆதிக்கம் எல்லாம் மறையும் போது போய்டுற கதை தானே ... ஹிஹி
-
//ஹஹஹா ... எத்தின படம் பார்த்துட்டோம் ... இத கூட சொல்ல மாடமா ... ஹிஹ்ஹெஈ .... ம்ம் அழுத்தமான கவிதைதான் ... என் போல மனைவி
வாச்சா .... ஏன் உனக்கு கை இலையா .. பொய் சீனி இருக்கு கப்பே தூள் இருக்கு ... காய்ச்சி நா குடிச்சிட்டு வச்ச மிச்ச பால் இருக்கு கலந்து குடிசிக போ .. இப்டி சொல்லி அனுபிடிவேன் ... மிஞ்சி மிஞ்சி மொறைப்பாங்க... அப்புறம் வழிக்கு வரதனே வேணும் ...சூரியன் உதிகுற நேரம் வார இவங்க ஆதிக்கம் எல்லாம் மறையும் போது போய்டுற கதை தானே ... ஹிஹி
//
haa haa haa