FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 20, 2012, 04:37:58 PM
-
கவிந்த பின்பனியிரவில்
மேகங்கள் மட்டும் நகர்ந்திருந்த வானில்
புகுந்து பறந்தன
மரணப் பறவைகள்..
உடன்பேச யாருமற்ற
ஒற்றை மரங்கள்
இடம் பேசியிருந்த காற்றின்
சிறகுகள் படபடத்தன..
இமைகளை நொடிக்கும் பொழுதில்
கண்ணகியின் தீமுலைகளை
எச்சமிட்டது..
நாளை விரிவதற்காக
காத்திருந்த பூ..
காலை குடிப்பதற்காக
வைத்திருந்த கஞ்சி பானை..
ஓட்டை திறந்து அன்றே
உயிர்த்த குருவி குஞ்சு..
சற்று முன் காற்றோடு
சரசமாடி இருந்த மரம்
உணர்வாலும் உதிரத்தாலும்
உருவாக்கிய வீடு
தாத்தா படுத்திருந்த முந்திண்ணை
நான் விளையாடி மகிழ்ந்த
முற்றம்
என எல்லாம்
வெடித்த குண்டுகளில்
வெந்து கருகி
சிதைந்து சிதறின..
அழுவதற்கு
அடுத்த வீட்டுக்காரனும்
மிஞ்சாமல் நிகழ்ந்துவிட்டது
அந்த அழிவு..
கனவு கூடுகளாய்
இருந்த வீடுகள்
கல்லறைகளாய் பிணங்களை
மூடிகிடந்தன..
இடிபாடுகளில் இருந்து
சிதறிய
ரத்த தெறிப்புகளில்
துக்க வாடையும்
தூக்க வாடையுமடித்து
கொண்டிருந்தது…
-
நாளை விரிவதற்காக
காத்திருந்த பூ..
காலை குடிப்பதற்காக
வைத்திருந்த கஞ்சி பானை..
ஓட்டை திறந்து அன்றே
உயிர்த்த குருவி குஞ்சு..
சற்று முன் காற்றோடு
சரசமாடி இருந்த மரம்
உணர்வாலும் உதிரத்தாலும்
உருவாக்கிய வீடு
தாத்தா படுத்திருந்த முந்திண்ணை
நான் விளையாடி மகிழ்ந்த
முற்றம்
என எல்லாம்
வெடித்த குண்டுகளில்
வெந்து கருகி
சிதைந்து சிதறின..
நிஜம்தான் ஆதி ... இதை நேரில் அனுபவித்தவர்கள் நாங்கள் .. பால்ய பருவத்தில் ... சிறுமியை இருந்த பொழுது இந்த அவலங்களை தரிசித்தே வந்தேன் ... சூழலை மிக அப்பட்டமாக பிரதி பலிக்கும் தங்கள் வரிகள் மீண்டும் என்னை அந்த சூழலுக்கு இட்டு சென்று விட்டது
-
ஒரு நாள் எப்படி இருக்கும் என்று யோசித்த போது தோன்றியது, ஆனால் இதைவிட கோரமானதாய் இருக்கும் என்றும் அறிவேன்
மிருகங்களின் பூமியில் கருனையை எதிர்ப்பார்க்க முடியாது
பேருக்குத்தான் புத்தனின் பூமி, புறாவுக்கு கூட இரங்கியவன் நிலத்தில் புறாவைவிட கேவலமாய் வேட்டையாடப்பட்டார்கள் எம் சகோதிரிகள், தாய்மார்கள், பிள்ளைகள்
-
ஆம் ... அவலங்களை நேரில் பார்த்தவள் ...திரைப் படங்களில் பார்ப்பது எல்லாம் சாதாரனம் நிய வாழ்வில் சதா ரணம் .... ரொம்ப கொடுமைய இருக்கும் ..