காலை உணவின் முக்கியத்துவம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-KbDoTldupXI%2FUFlcFz4DqKI%2FAAAAAAAABok%2FU50j3AoMF_s%2Fs320%2Fwpid-photo-jan-22-2012-712-am4.jpg&hash=3f0f4b0b381ead0a3c052ef144be0d34258157d7)
எம்மில் பலர் காலை உணவை தவிர்த்துக் கொள்கின்றனர் . காலை உணவின் அவசியம் பற்றி அவர்களுக்கு தெரிவதில்லை . காலை உணவை நாம் எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது . காலையில் நாம் உண்ணும் உணவு பூரணமாகவும் , சத்துள்ளதாகவும் இருக்க வேண்டியது அவசியம் .
இரவில் நாம் உணவை உட்கொண்டு விட்டு நித்திரைக்கு செல்கின்றோம் . எட்டு , ஒன்பது மணி நேரம் இடைவெளிக்குப் பின்பு தான் நாம் காலை உணவை உண்கின்றோம் . நமக்கு காலையில் சக்தி கிடைக்க வேண்டும் . அதற்க்கு காலை உணவை உன்ன வேண்டும் . காலையில் நாம் உண்ணும் உணவு சூடானதாகவும் , சத்துள்ள உணவாகவும் இருக்க வேண்டும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-tAfPwCXLmcM%2FUFlcCbljG8I%2FAAAAAAAABoc%2FBLqSVrz9v-s%2Fs320%2Foriginal_Breakfast%2BBLT-Inn%2Bon%2BFirst-Napa.jpg&hash=348c000695b7e6cb6a963521626c9b2df3bc93e7)
நாம் சாப்பிடும் உணவு குளுகோஸ் என்கிற சர்க்கரையாக மாற்றப்பட்டு உடலுக்கு தேவையான எரிசக்தியாக செயல்படுகிறது. இரவு முழுவதும் தூங்கும் போது உடலில் உள்ள க்ளூகோஸ் 6 லிருந்து 8 மணி வரை போதுமானது அதனால் நாம் தூங்கி எழுந்தவுடன் இரவு பட்டினியனால் சர்க்கரை காலையில் குறைந்து விடும். மூளை சக்தியை தேடி தவிக்கும் வேறு உடல் பாகங்களிலிருந்து சர்க்கரையை இழுத்துக் கொள்ளும். இதனால் உடல் ஆரோக்கியம் பழுதடையும். எனவே, காலை உணவினால், குளூக்கோஸ் கிடைக்கப்பட்ட மூளை சரிவர இயங்குகிறது. காலை உணவை தவிர்க்கக் கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் காலை உணவை எடுத்துக் கொள்ளவும். பழைய உணவை உண்பதை விட உடனே தயாரித்த உணவை உண்பது மிகவும் நல்லது .
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-FLPeo5SRtQo%2FUFlb9p81WkI%2FAAAAAAAABoU%2Fu7yR-DqRahs%2Fs320%2F7180407863_e99677ec56_z.jpg&hash=94e690a69b574552bd48db756cde59a8c55e744d)
காலையின் நாம் உண்ணும் உணவு தான் நாள்முழுதும் தேவைப்படும் சக்தியை அளிக்கிறது . அதிகளவான உணவை காலையில் உன்ன வேண்டிய அவசியமில்லை . குறைவான உணவாக இருந்தாலும் சத்தான உணவாக இருக்க வேண்டும் . அதிகம் காலையில் சாப்பிட்டால் சோம்பல்தனம் தான் வரும். நம்மில் பலர் நாம் மெலிவாக இருக்க வேண்டும் என எண்ணி காலை உணவை தவிர்த்துக் கொள்கிறார்கள் . காலை உணவில் அவசியம் இருக்க வேண்டியவை நார்ச்சத்து மிகுந்தவை. இட்லி , தோசை , ரொட்டி, ஓட்ஸ் போன்ற உணவுகளையும் உப்புமா , கடலை, பயறு போன்ற உணவுகளையும் உண்ணலாம்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-b-LyHx8wdwU%2FUFlb4b-lYnI%2FAAAAAAAABoM%2FiNZcOIIQkG8%2Fs320%2F467125208_b1161f24cc_z.jpg&hash=9b42f3a64085086ff25c620d83756a08f4723e36)
நாம் இந்த காலை உணவை தவிர்ப்பதாலே உடலில் குறைபாடு , நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. காலை உணவை நாம் உண்பதால் நாம் நீண்டநாள் வாழலாம், நம் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் பெறவும் முடியும் . காலை உணவின் அவசியம் பற்றி எல்லோரும் அறிந்திருக்க வேண்டும் . இன்றைய அவசர உலகில் நம்மில் பலர் காலை உணவை உண்பதில்லை . எவ்வளவு வேலை இருப்பினும் கொஞ்ச நேரத்தை ஒதுக்கி காலை உணவை உண்ண வேண்டும்.