FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 18, 2012, 07:51:31 PM

Title: உயிர்கொல்லும் நாசியும் , சுவாசமும் .....
Post by: aasaiajiith on September 18, 2012, 07:51:31 PM
உன் மீதான
என் உயர் நேசத்தை
உயிர் நிறைந்த
உயிர் நேசத்தை
சதவிகிதப்படி கணக்கிட்டால்
முழு முழுதினில்
கால் சதவிகிதம் நாசியும்
இன்னொரு கால்  சதவிகிதம்
அதில் வெளிப்படும் சுவாசமும்
சேர்ந்து சுருட்டிக்கொள்ளும்
சேதியினை அறிவாயோ ?

உன் நாசியை தேசிய சின்னமாகவும்
சுவாசத்தை தேசிய கீதமாகவும்
அறிவிக்க ஆசை தான் ஆசைக்கு
என்ன செய்ய ?
எனக்கோ தேசபற்றும் குறைவே சற்று
உன் சுவாசபற்றோடு ஒப்பிடுகையில்

நல்லவளே  !
நல்ல வேலை ,நீ
மூக்குத்தி ஏதும் அணியவில்லை
அணிந்திருந்தால்
பொன்,முத்து,மணி,வளையம்,வைரம்
என அத்தனையையும் வீணாக
வெறுத்திருப்பேன்,நிச்சயமாய் தானாக .

அதிநவீன திறன்வாய்ந்த
போர்த்தளவாடங்கள் தாங்கிய
முப்படைகளையும் தனிநபராய்
நேரெதிர் நின்று
எதிர்கொள்ள துணிவுண்டு
உயிர்கொல்லும் உன் நாசியை
நேரெதிரே எதிர்கொள்ள
எள்ளளவும் என் நெஞ்சில்
துணிவில்லை அறிவாயா ?

முக்காலமும் கடுந்தவம் புரிந்து
முழுமுழுதாய் முற்றும் துறந்து
முழுமுயற்சியாய் முயற்சிக்கும்
மாமுனிவர்களாலேயே ஓர் முறையும்
பெறமுடியாத மோட்சம் அதனை
உன் மூக்கின் மார்க்கமாய்
சுவாசிக்கப்படும் சுவாசம் மட்டும்
முறைமுறையாய் பலமுறை பெறுவதெப்படி ...??

Title: Re: உயிர்கொல்லும் நாசியும் , சுவாசமும் .....
Post by: Thavi on September 19, 2012, 02:07:39 AM
superya arumaiyna kavithai keep it up ;D :D
Title: Re: உயிர்கொல்லும் நாசியும் , சுவாசமும் .....
Post by: aasaiajiith on September 20, 2012, 12:16:33 PM
வாசித்தமைக்கு ஒன்று
வாசித்து ரசித்தமைக்கு ஒன்று
வாசித்து , ரசித்து , வாழ்த்தியமைக்கு ஒன்று
என நன்றிகள் பல தம்பி தவி !!
Title: Re: உயிர்கொல்லும் நாசியும் , சுவாசமும் .....
Post by: Anu on September 21, 2012, 02:15:53 PM
romba nalla iruku unga kavithai ajith .
nandri pagirndamaiku :)
Title: Re: உயிர்கொல்லும் நாசியும் , சுவாசமும் .....
Post by: aasaiajiith on September 21, 2012, 09:46:39 PM
KarUththittamaikku Nandrigall Anu !!