FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on September 18, 2012, 06:18:09 PM
-
சிவப்பாய் அடிவானம்
சிவக்கும் மாலை காலம்
சில்வண்டும் சிறு நண்டும்
சிலு சிலுத்து கிறு கிறுபபூட்டும்
அலை வந்து கரை சேரும்
அரை நொடிக்காய்
அடிக்கடி ஏங்கும் கரைதனில்
அலைந்தாடும் எண்ணங்களோடு நான் ..
சிறு கோடாய்
கடலின் சமாந்தரதுள்
சிறுக அமிழும் சிவந்த சூரியன்
ஒரு கோடாய் நிலவின் வரவை
உறுதி செய்ய இருளை பகிர்ந்தான் ....
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அலையாடும் படகோடு
அலைந்தாடும் நிலவொளி கடல்தனில்...
கரைக்கும் அலைக்கும்
கடலுக்கும் எனக்கும்
இடைவெளி சிறிது தான் ...
இருந்தும் அனைத்தையும் ரசித்தேன் ..
அவனோடான என் நகர்வுகளுக்கும்
இடைவெளி கொடுத்திருந்தால்
இந்த அவலங்களும் அலர்ந்து இருக்காதோ ...
மினுக் மினுக்கென
மின்னும் நட்சத்திரங்கள் அவனால்
மிகைபடுத்தி அலங்கரிக்கப்பட்ட
இது போன்ற ஒரு மாலை
நினைவுக்குள் வந்து போனது ...
நினைவுக்குள் புகுந்து
நிகழ்வுகளில் தாகம் செயும்
அவன் நினைவுகளை
இந்த அலைதனில் கழுவ முடிந்தால்
காலம் முழுமைக்கும்
கடலுக்கு நான் கடமைபட்டவள் .
-
//சிறு கோடாய்
கடலின் சமாந்தரதுள்
சிறுக அமிழும் சிவந்த சூரியன்
ஒரு கோடாய் நிலவின் வரவை
உறுதி செய்ய இருளை பகிர்ந்தான் ....
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அலையாடும் படகோடு
அலைந்தாடும் நிலவொளி கடல்தனில்...
//
சிறப்பான காட்சிப்பதிவு, கவிஞரின் கண்ணொரு கேமிரா என்பதற்கு மேலும் ஒரு சான்று
//கரைக்கும் அலைக்கும்
கடலுக்கும் எனக்கும்
இடைவெளி சிறிது தான் ...
இருந்தும் அனைத்தையும் ரசித்தேன் ..//
சட்டென கவிதையை அடுத்த தளத்துக்கு ஆயத்தம் செய்யும் வரிகள்
//நினைவுக்குள் புகுந்து
நிகழ்வுகளில் தாகம் செயும்
அவன் நினைவுகளை
இந்த அலைதனில் கழுவ முடிந்தால்
காலம் முழுமைக்கும்
கடலுக்கு நான் கடமைபட்டவள் .//
கையறு நிலையை கச்சிதமாய் உரைத்திருக்கும் வரிகள்
உங்கள் கவிதைகளில் நான் அதிகம் ரசித்திருப்பது சங்க இலக்கியம் போல இரு இயற்கை சூழலையும், குறியீடுகளையும் உருவாக்கி அதனையும் கவிதையின் சூழலை, கருவை, உணர்வை பேச விடும் திறம் தான்
இந்த திறனை கெட்டியா பிடிச்சுக்கோங்க
-
நன்றி ஆதி ... கூகிள் நிழல் படம் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் ... அதிலே ஒரு நிழல் படம் என்னை கவர்ந்தது அதனை வைத்து இதற்க்கு கருவை கொணர்ந்தேன் ... தங்கள் பாராட்டுக்கு நன்றி .. மிக்க மகிழ்ச்சி . ;)